உலகம்
கென்ய முன்னாள் பிரதமர் ரெய்லா ஓடிங்கா இந்தியாவில் காலமானார்

கென்யாவின் முன்னாள் பிரதமரும், நாட்டின் அரசியலில் மிக முக்கியமான நபர்களில் ஒருவருமான ரெய்லா ஓடிங்கா (Raila Odinga தமது 80 ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக இந்தியாவில் கேரளாவில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர்மேலும் படிக்க...
உயிரிழந்த மேலும் 4 பணயக் கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்

உயிரிழந்த மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பி அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் IDF கூறியுள்ளது. அந்த தகவலின்படி, செஞ்சிலுவைச் சங்கம் சவப்பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்டு செவ்வாய்க்கிழமைமேலும் படிக்க...
738 நாட்களுக்கு பின்னர் ஒன்று சேர்ந்த தம்பதி

காசாவில் நீண்ட நாட்களாக பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 738 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் திகதி அமைதிமேலும் படிக்க...
பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டாலும், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போயுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. முன்னதாக, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்கள்மேலும் படிக்க...
மத்திய கிழக்கில் வரலாற்று விடியல்; பாரிய கைதிகள் பரிமாற்றக் கொண்டாட்டம்

காசாவில் இரண்டு வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக திங்களன்று (13) இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒரு பெரிய பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தைக் கொண்டாடினர். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்த திட்டத்தின் ஒரு முக்கியமான முதல் கட்டத்தில்,மேலும் படிக்க...
ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகளும் விடுவிப்பு

ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை கொண்ட முதலாவது குழுவை முன்னதாக ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளமேலும் படிக்க...
இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார். இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு வந்த டொனால்டு டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர்மேலும் படிக்க...
டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி

இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிப்பதற்கு முன்னதாக, டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். பணயக்கைதிகள் “வீட்டுக்கு வருகிறார்கள் என இந்த பேரணியின் போது உரையாற்றிய அமெரிக்க சிறப்பு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார். காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் திருப்பிமேலும் படிக்க...
வர்த்தகப் போர் : சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்

ரஷியாவிடம் எரிபொருள் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார். ரஷியாவிடம் எரிபொருள் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ஆனால் சீனாவை விடுத்து இந்தியாவை மட்டும்மேலும் படிக்க...
காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கியதைத் தொடர்ந்து, காசாவில் இன்று காலை 09.00 மணிக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக,மேலும் படிக்க...
டென்மார்க்கில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை

டென்மார்க், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டென்மார்க் நாடாளுமன்றத்தின் தொடக்க நிகழ்வில் பிரதமர் மெட்டேமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் அண்டை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை மின்டானாவோ பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்படி, தெற்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு ஆபத்தானமேலும் படிக்க...
அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் மரியா கொரினா மச்சோடா – ட்ரம்பின் எதிர் பார்ப்பு தோல்வி

2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா வென்றுள்ளார். வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கான அவரது அயராத உழைப்பிற்காகவும்” “சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கானமேலும் படிக்க...
ஷேக் ஹசீனாவை கைதுசெய்ய உத்தரவு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை இராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஷேக் ஹசீனாவுக்கு,மேலும் படிக்க...
ஸ்பெய்னில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு

ஸ்பெய்ன் தலைநகர் மாட்ரிட்டில் கட்டுமானத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் பகுதியளவு இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரின் உடல்கள் புதன்கிழமை (08) அதிகாலை கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக மாட்ரிட்டின் அவசர சேவைகள் எக்ஸ்மேலும் படிக்க...
முதல்முறையாக வெளிநாடு செல்லும் பாப்பரசர் லியோ

போப் பதினான்காம் லியோ எதிர்வரும் நவம்பர் மாதம், துருக்கி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதாக வத்திக்கான் நிர்வாகம் அறிவித்துள்ளது. வத்திக்கான் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான பாப்பரசர் பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அதையடுத்து,மேலும் படிக்க...
மற்றுமொரு தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம்

போதைப் பொருள் கடத்தி குற்றச்சாட்டில் மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதற்காக மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38)மேலும் படிக்க...
அல்பேனியாவில் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நீதிபதி

அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நீதிபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீதிபதி அஸ்ட்ரிட் கலாஜா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் சொத்துமேலும் படிக்க...
பாகிஸ்தானில் புகையிரதம் மீது வெடிகுண்டு தாக்குதல்- பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஃபர் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் சிந்து-பலுசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதிக்கு அருகே குவெட்டா செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் எனும் விரைவு புகையிரதத்தை இலக்குவைத்தேமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 152
- மேலும் படிக்க