இலங்கை
சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் 35 பேர்மேலும் படிக்க...
இலங்கையின் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா 02 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு

இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடினமான நாட்களை எதிர்கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கவலை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த நெருக்கடியின் போதுமேலும் படிக்க...
ஜனாதிபதி நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்கும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்மேலும் படிக்க...
பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீள ஆரம்பம்

மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டத்திற்கான கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் டிசம்பர் மாதம் 16 திகதி ஆம் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பேரிடர் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விசேட அறிக்கையொன்றைமேலும் படிக்க...
இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “டிட்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கைமேலும் படிக்க...
ஆர். பிரேமதாச மைதானம் அவசர நிவாரண மையமாக அறிவிக்கப்பட்டது

பேரிடர் ஏற்பட்டால் 3,000 பேர் வரை தங்கக்கூடிய அவசர நிவாரண மையமாக ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் வெள்ளம் மற்றும் பாதகமான வானிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமேலும் படிக்க...
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் மனைவி, மாமியார் மற்றும் மூன்று மாதக் குழந்தை என நாவலப்பிட்டிமேலும் படிக்க...
யாழ் போதனா வைத்திய சாலைக்கு சிகிச்சை பெற வருகின்ற பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்

தற்போது நிலவும் கடுமையான மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வானிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப்மேலும் படிக்க...
உடைமைகளுக்காக உங்களது உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் – பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

நாட்டில் நிலவும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக உயிர் நீத்த உறவுகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, அனர்த்தத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புமேலும் படிக்க...
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் முப்படையினர்

நாட்டின் தற்போதைய மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் இராணுவ வீரர்களை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி, இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இராணுவம், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக சுமார் 20,500மேலும் படிக்க...
இலங்கையுடன் உதவிக்கு கைகோர்க்கிறது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்திய விமானத் தாங்கி கப்பல்

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான இயற்கை அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக மீட்பதற்காக கொழும்பு துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டு இருக்கும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான் விக்ராந்த் இல் உள்ள உலங்குவானூர்திகளின் உதவிகளை கோரியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர்மேலும் படிக்க...
மோசமான வானிலை காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தம்

நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று (28) காலை 6:00 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களத்தின் கூடுதல் பொது மேலாளர் (செயல்பாடுகள்) சந்திரசேன பண்டார இதனை தெரிவித்துள்ளார். இதன்படி,மேலும் படிக்க...
சீரற்ற வானிலை – 56 பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்றமேலும் படிக்க...
மோசமாகும் வானிலை – உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு ஜனாதிபதி அவசர உத்தரவு

நாடு முழுவதும் நிலவும் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே 20,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும், இராணுவம் சுமார் 3,790 பேரை மீட்டு பாதுகாப்பானமேலும் படிக்க...
கண்டியில் அவசரகால பேரிடர் நிலைமை பிரகடனம்

நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்திற்கு அவசரகால பேரிடர் நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இன்று தெரிவித்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தில் பல பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவுமேலும் படிக்க...
யாழ். பல்கலைக் கழகத்தில் உணர்வெழுச்சி-யுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்படி, தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களை நினைவேந்திமேலும் படிக்க...
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சி-யுடன் அஞ்சலி

யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தின் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகைச்சுடர் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலத்தினால் ஏற்றப்பட்டது.மேலும் படிக்க...
கனமழையிலும் தம்பலகாமத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலை, தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் ஆலய முன்றலில் தம்பலகாம இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை (27)கொட்டும் கனமழையிலும் இடம் பெற்றது. வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழினத்தின் விடுதலைக்காகமேலும் படிக்க...
யாழ். நல்லூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்-பட்ட மாவீரர்நாள் நினைவேந்தல்

மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27.11.2025) நல்லூரடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று (27.11.2025) மாலை 06.05 க்கு மணி ஒலிக்க, 06.06 க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு துயிலும் இல்ல கீதம் ஒலிக்கப்பட்டது. இதன்போதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 405
- மேலும் படிக்க

