இலங்கை
புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
புலம் பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாக பார்க்கின்றோம். எனவே புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்மேலும் படிக்க...
ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவம்: உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 119 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, இன்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும்மேலும் படிக்க...
ரிசாத் பதியுதீனின் சகோதரர் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில்
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறுமேலும் படிக்க...
ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியில் வைத்து ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஈஸ்ரர் தினமான ஏப்ரல் மாதம் 21ஆம்மேலும் படிக்க...
வடக்கில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா – யாழில் 8 பேருக்கும், முழங்காவில்லில் 4 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்றுமேலும் படிக்க...
இலங்கையில் சிக்கித் தவிக்கும் 80 இந்தியர்கள் – உடனடியாக மீட்குமாறு கோரிக்கை!
இலங்கையில் சிக்கித்தவிக்கும் 80 இந்தியர்கள் தங்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற 80 இந்தியர்கள் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் அங்கு விடுதிகள்,மேலும் படிக்க...
காப்புறுதி தாரர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள காப்புறுதிதாரர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு ஏற்ப அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அமையவே இந்த நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தமயந்திமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பகிரங்கப் படுத்தப்பட வேண்டும் – இரா.சாணக்கியன்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்படமேலும் படிக்க...
ஞாயிறு தற்கொலை தாரிகளை மன்னித்து விட்டோம் – கத்தோலிக்க திருச்சபை அறிக்கை வெளியீடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளை மன்னிப்பதாக இலங்கை கத்தோலிக்க தேவாலயம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 279 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்டவர்களை மன்னித்துமேலும் படிக்க...
அரச, தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் ஏப்ரல் 20 வரை நீடிப்பு
கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,மேலும் படிக்க...
இம்முறை புத்தாண்டு பண்டிகையை வணங்குகின்ற காலம்: அகத்தினுள் பிரார்த்தியுங்கள்- ஆறு திருமுருகன்
உலகளாவிய ரீதியில் இன்று இலட்சக் கணக்கானவர்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி புத்தாண்டை வீட்டில் இருந்தேமேலும் படிக்க...
கிளிநொச்சியில் கால்வாயில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராமமேலும் படிக்க...
துன்பத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஆறுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும்
இயேசு பிரானின் தெய்வீகமகிமையினால் துன்பத்திற்குள்ளாகியுள்ள அனைத்துமக்களுக்கும் இந்த நன்நாளில் ஆறுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபாய புனித உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: இலங்கை வாழ் கிறிஸ்தவமேலும் படிக்க...
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்துள்ளார். இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்தார் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயின்மேலும் படிக்க...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தைமேலும் படிக்க...
கொரோனா பரிசோதிக்க பயன்படும் 20,000 கருவிகள் இலங்கைக்கு
உலக பிரசித்திப்பெற்ற அலிபாபா நிறுவனம் இலங்கையில் கொரோனா நோயை பரிசோதிக்க பயன்படும் 20,000 கருவிகளை இன்று நாட்டுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்த கருவிகளை தாங்கிய சிறப்பு விமானம் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது. அதேபோல் சீனாவும் கொரோனா தொற்றாளர்களை பரிசோதிக்கும் 20,000 கருவிகளைமேலும் படிக்க...
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை
கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் எவ்வித கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் இதுவரை 190 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 339
- 340
- 341
- 342
- 343
- 344
- 345
- …
- 434
- மேலும் படிக்க
