இலங்கை
பொதுத் தேர்தல் பற்றி நீதிமன்றம் தீர்மானிக்கும் – பிரதமர்
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த தொற்றுநோய் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் சகல அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன. முப்பது முதல்மேலும் படிக்க...
வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்
கொரோனா தொற்றினால் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர், டொக்டர் சந்திமா மது விக்ரமதிலக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் சிறுவர்களின் போசாக்குமேலும் படிக்க...
அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் – நவநீதம்பிள்ளை!
தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கும், நீதியையும், இழப்பீடுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்வதற்குமாக நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு காணொளி மூலம் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை?
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவுமேலும் படிக்க...
குவைத்தில் இருந்து இலங்கை வந்தவருக்கு கொரோனா
குவைத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில்மேலும் படிக்க...
பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாய் கைது

பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவைமேலும் படிக்க...
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்த தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று மூன்றாவதுமேலும் படிக்க...
இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது – ஜனாதிபதி
இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு சர்வதேச அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 11 ஆவது தேசிய நினைவுதின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொருமேலும் படிக்க...
இலங்கை அரசாங்கம் நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும் – மீனாக்சி கங்குலி
போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு பதினொரு வருடங்களாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் உண்மை நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நோக்கி வாக்குறுதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில்மேலும் படிக்க...
தேசிய படைவீரர்கள் தினம் இன்று
30 வருட பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தாய்நாட்டை விடுவிக்கவும், நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த பயங்கரமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய போர் வீரர் நினைவு தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லமேலும் படிக்க...
பிரபாகரனுடனான நினைவுகளை டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்தார் மத்திய அமைச்சர்!
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும் அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்றுமேலும் படிக்க...
யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன – வைத்தியசாலை பணிப்பாளர்
யாழ். குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். தெடர்ந்து த.சத்தியமூர்த்திமேலும் படிக்க...
நிரந்தரமான நீதியை பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்
தமிழ் தேசிய பரப்பிலே இருக்க கூடிய கட்சிகள் அனைத்தும் பேதங்களை மறந்து நிரந்தரமான நீதியை பெறுவதற்கு ஒன்றுபட்டு செயற்படவேண்டம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா நகரசபை வாயிலில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கு நாம் விட்ட தவறுகளே காரணம் – சீ.வி.விக்னேஸ்வரன்
இனப்படுகொலையாளிகள் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கும் என்றுமில்லாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கும் நாம் விட்ட தவறுகளே காரணம் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ். நல்லூர்மேலும் படிக்க...
உயிர் நீத்த உறவுகளுக்கு முள்ளி வாய்க்காலில் மலர் தூவி அஞ்சலி!
இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது. நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்கை பிரகடன அறிக்கை வெளியிட்டப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டிருந்ததாக ஆதவனின்மேலும் படிக்க...
கொரோனாவை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாக கட்டுப்படுத்த முடியும் – இராணுவ தளபதி
சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுநோயை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனமேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலை – ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விவாதிக்க உள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின்மேலும் படிக்க...
ஒட்டு மொத்தத் தமிழினமும் நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனம்
பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் பிரகடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசங்கள்மேலும் படிக்க...
தஞ்சையில் உள்ள ஈழப்போர் நினைவிடம் போல் முள்ளி வாய்க்காலிலும் நினைவிடம்- நினைவுகூரல் அறிக்கையில் மாவை

தமிழ்நாட்டில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளமை போல், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டு அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுவதற்கு பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவு கூரலுக்குத் தடையில்லை-பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்
முள்ளிவாய்க்கால், நினைகூரல் நிகழ்வுகளுக்குத் தடைகோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதியளித்தார். அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதிவரை நீதிவான் ஒத்திவைத்தார். “யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 334
- 335
- 336
- 337
- 338
- 339
- 340
- …
- 435
- மேலும் படிக்க
