இலங்கை
நாட்டை கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்வதை தடுக்க கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் – கருணாகரம்
அரசாங்கம், நாட்டை ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்லும் நிலைமையை நாங்கள் தடுக்க வேண்டுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்த வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்றமேலும் படிக்க...
நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம்; பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட படையினர்
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில், நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் பாதணியுடன் கடமையில் நின்றமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம்மேலும் படிக்க...
முரண்பாடு இல்லாத ஜனாதிபதி-பிரதமர் ஆட்சி: மக்களே ஆணை தரவேண்டும்- மஹிந்த
ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடற்ற விதத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலைமை மக்கள் மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தனிப்பட்ட குடும்பத்தை இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது எனவும் அதனைமேலும் படிக்க...
தமிழர்கள் பாதுகாப்பான தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டும்- உறவுகள் அறைகூவல்
தமிழர்கள், பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டுமென வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு, வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர்மேலும் படிக்க...
இலங்கை இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்தார் எடப்பாடி!
இலங்கை இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எனினும், இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது. தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை தங்களிடம்மேலும் படிக்க...
3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா?- சஜித்
3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். கடுவெலயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்தமேலும் படிக்க...
சேனாதிராஜா தொடர்பாக ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு
தேர்தலில் தோல்வியடைந்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக அழுதுகொண்டு திரிந்த சேனாதிராஜாவுக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேமேலும் படிக்க...
மன்னாரில் பனை மரக் காட்டில் திடீர் தீப்பரவல்- நூற்றுக் கணக்கான பனை மரங்கள் அழிவு!
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான தரவன் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பனை மரக் காட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் சனிக்கிழமை (20) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீப் பரவல் இன்று காலைமேலும் படிக்க...
யாழில் விபத்து: இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் பயணித்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த டிப்பருடன் மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
கருணாவின் ஆனையிறவுப் பேச்சு பாரதூரமானது: ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்க ஐ.தே.க. வலியுறுத்து!
ஆனையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றுமேலும் படிக்க...
படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள்: வரைபடத்தை வெளியிட்டன சர்வதேச அமைப்புகள்
இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன. எதிர்வரும் ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இரு அமைப்புகளும் இலங்கையின் சித்திரவதைமேலும் படிக்க...
ஒன்றிணைந்து பயணிக்கவிருந்த பயணத்தை சின்னா பின்னமாக்கி விட்டார்கள்
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து பயணிக்கவிருந்த பயணத்தை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் சின்னாபின்னமாக்கி விட்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ரத்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்தமேலும் படிக்க...
ரிஷாட் பதியுதீனின் சகோதரன் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தமை உறுதி
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோததரான மொஹமட் ரியாஜ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார். அத தெரண தொலைக்காட்சியில் இன்று (19)மேலும் படிக்க...
தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன்
தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் முனைப்பு இடம்பெறும் போது தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா தரணிக்குளம் புதியநகரில் இடம்பெற்றற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன்மேலும் படிக்க...
மக்களுக்கான அரசாங்கத்தை அமைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது- பிரதமர்
தற்போது மக்களுக்கு தங்களுக்கு தேவையான அரசாங்கத்தை நியமிப்பதற்கான ஜனநாயக உரிமை கிடைத்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருந்தது போல்மேலும் படிக்க...
அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு கூட்டமைப்பு தயாரில்லை – சிறிக்காந்தா
தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே என்.சிறிக்காந்தா இவ்வாறு மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி
ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை தான் ஏற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, ஈஸ்டர் தாக்குதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறான தாக்குதலொன்று நடைபெறப்போகின்றதுமேலும் படிக்க...
வவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு
வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியதுடன், வீட்டின் கதவுமேலும் படிக்க...
தமிழரின் தொன்மை கேள்விக்குள்ளாகும் திட்டங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்!- திருமலை ஒன்றியம்
கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பாக திருகோணமலை பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிக்கின்ற அதேவேளை, தமிழரின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாகும் அரசியல் வேலைத் திட்டங்களைமேலும் படிக்க...
கிழக்கை சிங்கள பகுதிகளாக மாற்றுவதே ஜனாதிபதி செயலணியின் நோக்கம் – சம்பந்தன் கடிதம்
பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 328
- 329
- 330
- 331
- 332
- 333
- 334
- …
- 435
- மேலும் படிக்க
