இலங்கை
நாட்டில் இன்றும் 400 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் மேலும் 400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தைமேலும் படிக்க...
நாடு திங்கட்கிழமை முழுமையாக திறக்கப் படலாம்- அஜித் ரோஹன
புதிய வழமைப்படுத்தல் திட்டத்தின்கீழ், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு முழுமையாகத் திறக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், நாடுமேலும் படிக்க...
வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் மஹாம் ரூத்யுஞ்ஜய ஹோமம்
வவுனியா- கந்தசுவாமி ஆலயத்தில் மஹாம்ரூத்யுஞ்ஜய ஹோமம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு ஆசி கோரும் வகையிலும், ஒட்டுமொத்த உலக மக்களையும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்குமாறு ஆசி கோரும் வகையிலும், சகல பௌத்த விஹாரைகளிலும் ரத்தன சூத்திரமேலும் படிக்க...
பிரதமரின் தலைமையில் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 53ஆவது நினைவு தின நிகழ்வு!
அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 53ஆவது நினைவு தின நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கல்லையில் உள்ள டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கௌரவ பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ,மேலும் படிக்க...
மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை
மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்திவள அமைச்சும் நீர் விநியோக சபையும் கோரிக்கை விடுத்துள்ளன. மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகமானோர் வீடுகளில் தங்கியிருப்பதால் மின்சாரம் மற்றும் நீர்மேலும் படிக்க...
உறவுகளை நினைவு கூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதிக்கு சிறிதரன் கடிதம்
தங்களது உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த கோரிக்கையைமேலும் படிக்க...
அரசியல் கைதிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு என்ன? – சுரேன் ராகவன்
அரசியல் கைதிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு என்னவென நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் கைதிகளாக எத்தனை பேர் உள்ளனர் எனவும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம்மேலும் படிக்க...
நாட்டை முடக்க முடியாது: நடைமுறைகளைப் பின்பற்ற மக்கள் பழக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி
நாட்டை முடக்காமல், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுவதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப்மேலும் படிக்க...
பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது! – சஞ்சீவ தர்மரட்ன
வடமாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனாதொற்றினை கட்டுப்படுத்த முடியாது என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்தார் யாழ்ப்பாண நகரில் பொலிஸாரினால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர் குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரதிப் பொலிஸ்மேலும் படிக்க...
கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை!
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள இம் மாசு பொருட்களை அகற்றும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மிதக்கும் கடல் பிளாஸ்டிக் கழிவுமேலும் படிக்க...
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக வங்கி தெரிவிப்பு!
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது. அந்த வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹேய்டட் சர்வோஸ் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையும்மேலும் படிக்க...
கிழக்கில் 78 பேருக்கு கொரோனா- பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவிப்பு!
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 78 கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளதுடன் 2264 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் தேவையற்ற விதத்தில் வீடுகளைவிட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பேணி கவனமாக இருக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன்மேலும் படிக்க...
அரசாங்கம் தமது தேவைகளுக்காகவே முஸ்லிம் அரசியல் வாதிகளை வளைத்துப் போடுகின்றது – வேலுகுமார்
அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகளை வளைத்துப்போடும் கோட்டாபய அரசாங்கம் , இன்னும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைவிடவில்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார்மேலும் படிக்க...
செல்வம் அடைக்கலநாதன் கடற்தொழில் அமைச்சருக்கு அவசர கடிதம்!
மன்னார் நறுவிலிக்குளம் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதார். இவ் விடையம் தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர கடிதம் ஒன்றைமேலும் படிக்க...
கொரோனா அச்சம் – வவுனியாவில் சிறுவர் பூங்காக்கள் மூடப்பட்டது
வவுனியாநகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்கள் நகரசபையின் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து செல்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிறுவர் பூங்காக்களைமேலும் படிக்க...
போலி செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்- இராணுவ தளபதி
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாமென சமூக ஊடகங்களுக்கு கொவிட்-19யை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் சில வலைத்தளங்களில்மேலும் படிக்க...
சிறுவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்! சி.யமுனாநந்தா
கொரோனா தொற்றானது தற்போது சமூகத்தில் வலுவாக பரவுகின்ற போது அது சிறுவர்களை தாக்கும் எனவும் இதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் யாழ்.மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார். கொரோனா தொற்றும் சிறுவர்களும் என்ற தொனிப்பொருளில் கருத்துரைக்கும் போதேமேலும் படிக்க...
வடக்கில் அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்படவேண்டும் – ஆளுநர் கோரிக்கை
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவத தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைய நாள்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றிமேலும் படிக்க...
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர்
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயமொன்று இடம்பெறுவதாகவும் அதற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின்மேலும் படிக்க...
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 302
- 303
- 304
- 305
- 306
- 307
- 308
- …
- 435
- மேலும் படிக்க
