இலங்கை
அரசு நிறுவனங்களின் மறுசீரமைப்பு : ஜனாதிபதி அநுர தலைமையில் அதிகாரிகள் குழு விசேட சந்திப்பு

அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பாக 2025.03.17ஆம் திகதி அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்துவதை கண்காணிக்க பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது.மேலும் படிக்க...
கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து

2026 மார்ச் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்த கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான இரண்டு விமானங்களை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL231 விமானமும், துபாயிலிருந்து கொழும்புக்கு திரும்பும் UL232 விமானமும் மேற்படி இரண்டுமேலும் படிக்க...
யாழ்.தென்மராட்சி-யில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது

வன்முறை கும்பலொன்றினால் யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவத் தளமாக இருப்பது அச்சுறுத்தல்

ஈரான் கடற்படையின் தென் பிரிவுக்குச் சொந்தமானதும், ஓமான் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நிலைநிறுத்தப்பட்டதுமான ‘மௌஜ்’ (Moudge) ரகப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமையானது, இந்தியப் பெருங்கடலில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஹம்பாந்தோட்டைமேலும் படிக்க...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்-களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கானமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் IRRI அரிசி ஆய்வு நிறுவனம்: பிரதமர் கலாநிதி ஹரிணி நேரில் பார்வை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (11) பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸில் (Los Baños) அமைந்துள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் ((IRRI) தலைமையகத்தைப் பார்வையிட்டார். இதன்போது, அந்தமேலும் படிக்க...
மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் நிறுத்தம்

மின்சாரசபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும், ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுவது உள்ளிட்ட 8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம்மேலும் படிக்க...
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “Eco-Tuarism” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அரசியல் பழிவாங்கலாக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், அரசியல் எதிர்ப்பாளர்களைமேலும் படிக்க...
வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பலமேலும் படிக்க...
கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்பு-களைப் பலப்படுத்துவதற்-கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

எதிர்வரும் 11ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய,கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்த நாட்டின் முக்கிய நிறுவனங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளைமேலும் படிக்க...
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt,, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார். இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.மேலும் படிக்க...
மலையக மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்த வேண்டாம் – மனோ கணேசன்

மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். கொட்டக்கலையில் நடைபெற்ற ‘மலையக வாழ்வுரிமை மாநாட்டில்’மேலும் படிக்க...
பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு

பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்க செயலாளர் லலித் சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் இதனை அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள்மேலும் படிக்க...
கொழும்பில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து யாழில் வியாபாரம் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனையில் ஆண்மேலும் படிக்க...
யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு

நேற்றிரவு யாழில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெறும் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றையதினம் தொழுகைமேலும் படிக்க...
மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்திய-சாலையில் இருந்து வெளியேற்றம்

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் உயிர்காக்கும் படகுகளில் இருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகளில் 22 பேர் நேற்று (07) கொக்கலையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே ஐரிஸ் தேனாமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு

இலங்கையில் நிலவும் மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பின் கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்து பயணம் மீண்டும் தொடங்கும் வரை தினமும் காலைமேலும் படிக்க...
“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு வரும் சூழலில், “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதிமேலும் படிக்க...
இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 432
- மேலும் படிக்க
