இலங்கை
106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு- சிவசக்தி ஆனந்தன்
கடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், செட்டிகுளம் பகுதியில் நினைவுகூரல் நிகழ்வை நடத்துவதற்கு பொலிஸார் தடை விதித்ததோடு, உயிர்நீத்த உறவுகளை நினைவேந்த அனுமதிக்கமேலும் படிக்க...
கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு- மக்களுக்கு எச்சரிக்கை!
கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் இன்று (புதன்கிழமை) இரவு பத்து மணிக்கு கணிக்கப்பட்ட நீரின் அளவின் அடிப்படையில் சில குளங்கள் நாளை வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது,மேலும் படிக்க...
யாழில் மினி சூறாவளி- 40இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோயிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இரவு இடம்பெயர்ந்துள்ளன. திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்ததுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் அனர்த்தம் காரணமாகமேலும் படிக்க...
புரவி சூறாவளி இன்று இரவு 7.10 மணியளவில் நாட்டை கடக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்
புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்போது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடியமேலும் படிக்க...
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியானது!
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டமேலும் படிக்க...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக குமார் ரட்ணம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக திரு. பிரபாகரன் குமாரட்ணம் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். கண்டி மாவட்டத்தின் புஸ்ஸல்லாவ நகரில் பிறந்த இவர். தலவாக்கலை, தேவிசிறிபுரவில் வசித்த திரு.குமாரரட்ணம் மற்றும் காலஞ்சென்ற லீலாவதி ஆகியோரின் கனிஸ்ட புதல்வராவார். புஸல்லாவமேலும் படிக்க...
ஜனவரி 1 முதல் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க புதிய வழி காட்டுதல்கள்
நாட்டில் சுற்றுலாத் துறையினை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதன்படி சுகாதார அமைச்சின் COVID-19 மருத்துவ மேலாண்மை நிபுணர் குழு சுற்றுலாத் துறையுடன் இணைந்து அதற்கான வழிகாட்டுதல்களைத் தயாரித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம்மேலும் படிக்க...
வடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்
வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெரும் குழுநிலை விவாத்தில் கருத்து தெரிவித்த அவர், இந்துக்களின் பண்டிகை தொடர்பாகமேலும் படிக்க...
ஓரினச் சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ்- இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையினால், இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார். வவுனியா வைத்தியாசாலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை
நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸமேலும் படிக்க...
இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..
During the 1980s KMS trained the Special Task Force, an elite unit of the Sri Lankan police, and also taught the country’s air force (JDS LANKA) இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானியமேலும் படிக்க...
சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்!
யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பருத்தித்துறையில் நிகழ்ந்துள்ளது. சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில்மேலும் படிக்க...
புதிய பொலிஸ்மா அதிபர் பிரதமருடன் சந்திப்பு
புதிய பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் இன்று (30) திங்கட்கிழமை முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். 35ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சி.டீ.விக்ரமரத்னஉத்தியோகப்பூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தனது சேவை குறித்துமேலும் படிக்க...
தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம்
தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும் நேற்றைய தினம் கார்த்திகை தீப திருநாளை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…!
ஐக்கிய தேசியக் கட்சியை புதுப்பிப்பதற்கான ஒரு தேசிய ரீதியிலான செயற்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியை எதிர்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கைமேலும் படிக்க...
கொழும்பின் நிலை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை
கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார். அண்மையில் பதிவானாக கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மற்றும் தொற்றுமேலும் படிக்க...
அஜித் டோவலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாலை, ஜனாதிபதி செயலகத்திலேயே இருவருக்கும் இடையில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல்,மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர், உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 109பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர், 10 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். நான்கு பேர், 31 முதல்மேலும் படிக்க...
பி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார் பிரதமர்?
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவியான சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “பிரதமரும் அவரது மனைவியும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்குமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தை முடக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதா? – கேதீஸ்வரன் விளக்கம்
யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை முடக்கவுள்ளதாக சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடையத்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 296
- 297
- 298
- 299
- 300
- 301
- 302
- …
- 435
- மேலும் படிக்க
