Main Menu

இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..

During the 1980s KMS trained the Special Task Force, an elite unit of the Sri Lankan police, and also taught the country’s air force (JDS LANKA)

இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய  கூலிப்படையினர் தொடர்புபட்ட  போர்க்குற்றங்கள் குறித்து பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரித்து வருவதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தனிநாடு கோரி போராடிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்காக,  1980 களில்  விசேட அதிரடிப்படை (STF)  என்று அழைக்கப்படும் இலங்கை காவல்துறையின் ஒரு உயர் படைப்  பிரிவுக்கு, பிரித்தானியாவின்  தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சேவை ( Private security company Keenie Meenie Services (KMS)   பயிற்சி அளித்தது.

இந்த விசேட அதிரடிப்படை  STF  பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், விசாரணையின்றி மரணதண்டனைகளை வழங்கியதாகவும்,  தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவது உள்ளிட்ட குற்றங்களும் இதில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த நிலையில் போர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பிரித்தானியாவின் முக்கிய காவற்துறைப்பிரிவான பெருநகர காவற்துறையால் (Metropolitan Police)  பிரித்தானிய  கூலிப்படையினர் மீது விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.

பிரித்தானிய  கூலிப்படையினரால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மார்ச் மாதத்தில் மெட் ஒரு பரிந்துரையைப் பெற்றதாகவும்,  அது குறித்த கண்டறிதல் முயற்சிகளைத் ( “scoping exercise”),  தொடர்ந்து, அது ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் காவற்துறை  செய்தித் தொடர்பாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார்..

(IMPERIAL WAR MUSEUM image captionAllegations of war crimes committed by British mercenaries in Sri Lanka are detailed in Phil Miller’s book)

இலங்கையில் கீனி மீனி படையினரின்  ஈடுபாட்டைப் பற்றிய பெரும்பாலான சான்றுகள்,  பிரித்தானியாவின்  அரசாங்க ஆவணங்களில் இருந்தும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பில் மில்லர் (Phil Miller) விடுத்த கோரிக்கையின் கீழ்  பெற்றுக்கொண்ட  தகவல்கள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இது குறித்த பில் மில்லரின் (Phil Miller)   நூலான “கீனி மீனி”  (போர்க்குற்றங்களில் இருந்து  தப்பித்த பிரிட்டிஷ் கூலிப்படையினர்) கடந்த  ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

இந்த போர் குற்ற விசாரணை பிரித்தானியாவின்  இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட  வலுவான தமிழ் சமூகத்தினரால் நெருக்கமாகப் பின்தொடரப்பட்டு  வருவதாகவும்,  அவர்களில் பலர் இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது பிரித்தானியாவுக்கு  தப்பிச் சென்றதாகவும் பில் மில்லர் (Phil Miller) தெரிவித்துள்ளார்.

இதேவேளை “1980 களிலேயே  ஏராளமான தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர் என்றும், அக்காலக்கட்டத்தில் கீனி மீனி படையினர் (KMS)  இலங்கையில் இருந்தனர் எனவும்  பில் மில்லர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உலங்குவானூர்திகளில் இருந்து துப்பாக்கியால் தாக்கப்பட்டதை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள் (People remember being attacked by helicopter gunships.) இவ்வாறான பல  சந்தர்ப்பங்களில் உலங்குவானூர்திகள் (Helicopter)  பிரித்தானிய கூலிப்படையினரால் இயக்கப்பட்டுள்ளன  என்பதை அறிந்து மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன்.” என பில் மில்லர் (Phil Miller)  குறிப்பிட்டுள்ளார்.

GETTY IMAGE

26 ஆண்டுகால இரத்தம் தோய்ந்த  மோதலுக்குப் பின்னர், மே 2009 இல் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப்  புலி களை தோற்கடித்தது. யுத்தம் இலங்கையை இன ரீதியாகப் பிரித்தது – ஒரு தனி அரசை விரும்பும் தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பெரும்பான்மை ப பௌத்த சிங்கள பேரினவாத (Buddhist)  அரசாங்கம் நிறுவப்பட்டது. இந்தக் கொடிய யுத்தத்தில் 100,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட  தமிழர்களைக்  காணவில்லை.

யுத்தத்தின் முடிவில்,   இரு தரப்பினரும் அட்டூழியங்களை போர்க் குற்றங்களை புரிந்ததாக,  ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியது . குறிப்பாக மோதலின் இறுதி கட்டங்களில் இவை அதிகமாக இடம்பெற்றதாக ஐநா சுட்டிக்காட்டியது. காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக, இந்த ஆண்டின் ஆரம்பத்தில்த்தில்,    இலங்கை ஜனாதிபதி முதல் முறையாக ஒப்புக் கொண்டார்.

முன்னாள்  எஸ்ஏஎஸ் அதிகாரியான டேவிட் வாக்கரால் (David Walke) கே.எம்.எஸ் நிறுவப்பட்டது. கே.எம்.எஸ்  என்ற தனியார் படை தற்பொது இல்லை, ஆனாலும்  கென்சிங்டனைத் தளமாகக் கொண்ட சலாடின் செக்யூரிட்டி (Saladin Security, which is based in Kensington.)  என்ற அதன் துணை  நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக 78 வயதான டேவிட் வோக்கர் (David Walke)  விளங்குகிறார் என பில் மில்லர் குறிப்பிட்டள்ளார். (Phil Miller)

எனினும் இலங்கையின்   போர்க்குற்றங்களுக்கு கே.எம்.எஸ்ஸைச் (KMS) சேர்ந்த எவரும் உடந்தையாக இருக்கவில்லை என்ற நிலைப்பாட்டில்  டேவிட் வோக்கர் (David Walke)  உறுதியாக உள்ளார்.

இது குறித்து டேவிட் வோக்கரின் பிரதிநிதி வெளியிட்ட ஒரு அறிக்கையில், “1980 களின் நடுப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு டேவிட் வாக்கர் அல்லது கே.எம்.எஸ் லிமிடெட் (KMS Ltd)  ஊழியர்கள் உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டுகள் திட்டவட்டமாக மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

“சலாடின் செக்யூரிட்டி (Saladin Security)  கே.எம்.எஸ்ஸிலிருந்து (KMS) முற்றிலும் தனித்துவமான  நிறுவனம் அத்துடன் இலங்கையில் அதற்கு  எந்தவிதமான  ஈடுபாடும் இல்லை. டேவிட் வோக்கர்  அதில் ஒரு பங்குதாரராகவோ  அல்லது கே.எம்.எஸ்ன்  இயக்குநராகவோ இருக்கவில்லை.

“போர்க்குற்றங்கள் குறித்த விநாரணைப்  பிரிவு இதுவரை சலாடின் செக்யூரிட்டி அமைப்பிடம் இருந்தோ அல்லது டேவிட் வோக்கரிடமிருந்து உதவிகள் எதனையும்  கேட்கவில்லை, ஆனால் அவர்கள் கேட்டால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் மகிழ்ச்சியடைவோம்.” என டேவிட் வோக்கரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

தமிழில் – நடராஜா குருபரன்.

By Nalini Sivathasan
BBC Asian Network

பகிரவும்...