இலங்கை
கிளிநொச்சி மற்றும் மன்னாரிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாகமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30மேலும் படிக்க...
அனைத்து மக்களுக்கும் ஏற்ற பொதுவான ஒரு ஆட்சியை செய்யுங்கள்- அரசாங்கத்துக்கு சிறிநேசன் கோரிக்கை
நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் சமத்துவமாக மதித்து, பொதுவான ஒரு ஆட்சியை செய்யுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
யாழ். மாநகர சபை முதல்வர் – ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார் என மாவை சேனாதிராஜா அறிவிப்பு
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார். இரண்டு தடவைகள் மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுமேலும் படிக்க...
கொரோனாவினால் பாதிக்கப் பட்டவர்களின் இறுதி சடங்குகள் குறித்த அறிக்கை விரைவில் !
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியிலான காரணங்களை பரிசீலித்துமேலும் படிக்க...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டம்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம், நல்லூர் பின் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. ‘கொல்லாதேமேலும் படிக்க...
சவேந்திர சில்வா மற்றும் கமால் குணரட்னவிற்கு பதவி உயர்வு
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்னவும் இலங்கை இராணுவத்தின் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப்மேலும் படிக்க...
ஐ.நா.விடம் புதிய கோரிக்கையை முன் வைத்தார் சிறீதரன்
இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரிடம் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக திருகோணமலை மீனவர்கள் கவலை
காலநிலை மாற்றம் காரணமாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக தாம் கடலுக்கு செல்ல முடியாதிருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா பேரிடர் காரணமாக தொழிலை மேற்கொள்ள முடியாமலிருந்தமேலும் படிக்க...
ஜனவரி முதல் நீண்ட தூர பேருந்து சேவைகள் ஆரம்பம்
எதிர்வரும் ஜனவரி முதல் நீண்ட தூர பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நீண்ட தூர மற்றும் மாகாண பேருந்து சேவை உட்பட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்துமேலும் படிக்க...
தமிழர்களுக்கு சமஷ்டி தீர்வு என மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சி- வீ.ஆனந்தசங்கரி
மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சமஷ்டிதான் தீர்வென கூறி மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்ற முயற்சிக்கின்றதென தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிமேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் – அரசியல், ஆன்மீக தரப்புகளுடன் சந்திப்பு
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த தினங்களாக அரசியல் கட்சி தலைவர்களையும்மேலும் படிக்க...
அடுத்த வாரம் கொவிட் தடுப்பூசிகள் குறித்த கலந்துரையாடல்!!
கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் தடுப்பூசியை வழங்குவதற்கான செயற்றிட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்கவிற்குமேலும் படிக்க...
விவசாயிகளை சந்தித்து உரையாடிய ஜனாதிபதி
நேற்று (26) பிற்பகல் அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழுமேலும் படிக்க...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் பல்லவராயன்- கட்ட சோலை மாதிரி கிராம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்றமேலும் படிக்க...
ஜனாசா எரிப்பிற்கு எதிராக வவுனியாவில் வெள்ளைத்துணி போராட்டம்
முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளைத்துணி கட்டும், கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. வவுனியா மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்மேலும் படிக்க...
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தினம் யாழில் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு அனுஷ்டிப்பு
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின்னர் கேட்போர் கூடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.மேலும் படிக்க...
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது,மேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விவகாரம் – அவசர கூட்டத்திற்கு அழைப்பு!
கொரோனாவுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக இன, மத, அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரும் அணி திரள வேண்டும் என அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழ் தலைவர்கள் வெறுமனே கடிதம் எழுதுவதை விடுத்து அரசியல் கைதிகள் விடுதலைக்காகமேலும் படிக்க...
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த 2004ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்டோரின் 16ஆம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 291
- 292
- 293
- 294
- 295
- 296
- 297
- …
- 436
- மேலும் படிக்க
