இலங்கை
கூட்டமைப்பு, ஏனைய தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் – கருணா!
தேசிய கட்சிகளுடன் இல்லை. தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
பிரிவினை வாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடமில்லை – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
மலர்ந்துள்ள புத்தாண்டில் பிரிவினைவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடமில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் ஆயுதங்களை எடுக்க எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலையின்மேலும் படிக்க...
சர்வதேச அரங்கில் இலங்கையை நிறுத்த முடியாது உள்ளமைக்கு தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்
தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் ஆர்பாட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 10மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,மேலும் படிக்க...
புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!
2021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும்மேலும் படிக்க...
மலையகத்திலும் புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகள்
உலகெங்கிலும் இன்று (வெள்ளிக்கிழமை) ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. புத்தாண்டை முன்னிட்டு ஹற்றன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா.சந்திரானந்த தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. காலைமேலும் படிக்க...
புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதையொட்டி, வேளாங்கன்னி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பேராலய தலைவர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில்மேலும் படிக்க...
கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், மாவைக்கும் இடையில் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் வடக்கு மாகாணமேலும் படிக்க...
உங்களின் தன்னிச்சையான செயற்பாட்டினால் யாழ். மாநகர சபையை இழந்துள்ளோம் – மாவையை சாடும் சுமந்திரன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இழந்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இலங்கைத்மேலும் படிக்க...
தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப் படுகின்றார்கள் – கஜேந்திரன் விசனம்
இந்த அரசாங்கமானது சிங்கள மக்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதுடன் தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமது காணிகளை வன வளத்திணைக்களத்திடமிருந்து மீட்டுத்தருமாறு ஆசிக்குளம் கிராம மக்கள் வவுனியா மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவில்மேலும் படிக்க...
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயூரன் தெரிவு
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவிலும் இன்று (புதன்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியைப் பெற்றுத்தருமாறுக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு, மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோரின் விடயத்தில் கரிசனை கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையையும்மேலும் படிக்க...
கிளிநொச்சி மற்றும் மன்னாரிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாகமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30மேலும் படிக்க...
அனைத்து மக்களுக்கும் ஏற்ற பொதுவான ஒரு ஆட்சியை செய்யுங்கள்- அரசாங்கத்துக்கு சிறிநேசன் கோரிக்கை
நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் சமத்துவமாக மதித்து, பொதுவான ஒரு ஆட்சியை செய்யுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
யாழ். மாநகர சபை முதல்வர் – ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார் என மாவை சேனாதிராஜா அறிவிப்பு
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார். இரண்டு தடவைகள் மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுமேலும் படிக்க...
கொரோனாவினால் பாதிக்கப் பட்டவர்களின் இறுதி சடங்குகள் குறித்த அறிக்கை விரைவில் !
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியிலான காரணங்களை பரிசீலித்துமேலும் படிக்க...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டம்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம், நல்லூர் பின் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. ‘கொல்லாதேமேலும் படிக்க...
சவேந்திர சில்வா மற்றும் கமால் குணரட்னவிற்கு பதவி உயர்வு
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்னவும் இலங்கை இராணுவத்தின் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப்மேலும் படிக்க...
ஐ.நா.விடம் புதிய கோரிக்கையை முன் வைத்தார் சிறீதரன்
இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரிடம் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 290
- 291
- 292
- 293
- 294
- 295
- 296
- …
- 435
- மேலும் படிக்க
