இலங்கை
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டமேலும் படிக்க...
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய, ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். அதனைத் தொடர்ந்துமேலும் படிக்க...
இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கவே உழைத்து வருகின்றது- கலையரசன்
உலக நாடுகள் கொரோனாவை ஒழிக்க உழைத்துவருகின்றது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்க உழைத்து வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்துள்ளார். திருக்கோவில் பிரதேசத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...
தகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை – அரசாங்கம்
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.மேலும் படிக்க...
இலங்கையில் 54 வீதமானவர்களே கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த தயார் – ஆய்வில் தகவல்
இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தினைப் பயன்படுத்துவதற்கு 54 வீதமானவர்களே தயாராக இருப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் ஆராய்ச்சி பிரிவு மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்போதே இந்த விடயம் தொடர்பாக தெரியவந்துள்ளது. அதன்படி, 38 வீதமானவர்கள் தாங்கள் உறுதியாகமேலும் படிக்க...
இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகியமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இணைந்து நடத்திய விசேட மாநாடு ஒன்றிலேயே இந்த விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தினால்மேலும் படிக்க...
வவுனியா நகர் தனிமைப் படுத்தலில் இருந்து விடுவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா- பட்டாணிசூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது.மேலும் படிக்க...
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப் படுத்தி எழுச்சிப் பேரணி- காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள் அமைப்பு
சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், “பெப்ரவரிமேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா!!
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான ஐ.நா. அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாராமேலும் படிக்க...
மீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்க முடியாது- சுரேஷ் பிரேமச்சந்திரன்

பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர மாற்று நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த காலப் போராட்டத்தில் தமிழக மீனவர்களுடையமேலும் படிக்க...
ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு- விசேட கூட்டத்தில் முடிவு!
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அதிகமாகவுள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத்மேலும் படிக்க...
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை? – ஐ.நா.அறிக்கை
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை விதிப்பது போன்ற பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்சிலெடினால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கைக்கு பதிலளிக்க ஜனவரி 27 வரைமேலும் படிக்க...
கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் இலங்கை பற்றிய அறிக்கை
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது. இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளைமேலும் படிக்க...
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. ‘பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் கினிகத்தேனை நகரில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் கபிலமேலும் படிக்க...
தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் போராட்டம்- தமிழ் கட்சிகள் விசேட கலந்துரையாடல்!
தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்த அவசர கலந்துரையாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும்மேலும் படிக்க...
நாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், ஊழல் குழுக்களின் மூலமே பிள்ளையானை விடுதலை செய்துள்ளனர் எனவும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை ஒருமேலும் படிக்க...
சுபவேளையில் திருமணம்: பின்னர் தனிமைப் படுத்தப்பட்ட புதுமணத் தம்பதி!
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர், பொலிஸார் இணைந்து ஆலய முன்றலில்மேலும் படிக்க...
யாழ். கந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்!
யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம் தொடர்பாக இராணுத்தினர் எனக் கூறி விசாரித்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறித்த கோயிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஐந்து மணியளவில் சென்றிருந்த சிலர், பூசகரிடம்மேலும் படிக்க...
சர்வதேசத்தை ஏமாற்றவே அரசாங்கத்தால் புதிய விசாரணைக்குழு அமைப்பு- ஸ்ரீநேசன்
அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்பது தமிழர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னளா் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். காலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும் கால நீடிப்பினைக் கோருவதற்காகவுமான ஒருமேலும் படிக்க...
பராமரிப்பற்ற காணிகள் நல்லூர் பிரதேச சபைக்கு உடைமையாக்கப்படும்- மயூரன் எச்சரிக்கை
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள், காணி உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் என அப்பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களிலுள்ள காணிகள், உரிமையாளர்களால் பராமரிக்கப்படாதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 285
- 286
- 287
- 288
- 289
- 290
- 291
- …
- 435
- மேலும் படிக்க
