இலங்கை
சரத் பொன்சேகாவிற்கு சவால் விடுத்த சமல்!
நாடாளுமன்றத்தில் இன்று காலை(வியாழக்கிழமை) அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்ட விவகாரத்தினாலேயே அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக ஆதவனின் நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் பெயரைக் குறிப்பிட்டு சரத் பொன்சேகா ஒரு சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.மேலும் படிக்க...
யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு – சீருடைகளும் பறிமுதல்!
யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம்மேலும் படிக்க...
பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது – சாணக்கியன்
அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 87 பேர் இதுவரை உயிரிழப்பு
வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவுகள் தொடர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 87பேர், தங்களது உறவுகளை தேடி அவர்களை கண்டுப்பிடிக்காமலேயே உயிரிழந்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகள் இருக்கின்றார்களா?மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது அரசின் புனையப்பட்ட கதை – லக்ஷமன் கிரியெல்ல
ஈஸ்டர் தாக்குதலுக்கு நௌபர் மௌலவி என்பவரே பிரதான சூத்திரதாரி என்பது அரசாங்கத்தினால் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப் பட்டதில்லை – பீரிஸ்
விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து தேசியமற்றும்மேலும் படிக்க...
யாழ். நகரில் தொற்று இல்லாதவர்களின் கடைகளை திறக்க அனுமதி!
யாழ். நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை (வியாழக்கிழமை) திறக்க அனுமதி வழங்கியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். கொரோனா நிலமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்மேலும் படிக்க...
இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்களுக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் குழு
இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்கள் அதிகளவில் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக குறித்த குழு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் 2020/21ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன்!

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார். இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் அறிவித்த சபாநாயகர், நாடாமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்சன்மேலும் படிக்க...
சாரா ஹல்டனுடன் ரெலோ உறுப்பினர்கள் சந்திப்பு
பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின்மேலும் படிக்க...
தமிழர்கள் கொல்லப் பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி
இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பேசிய ஸ்ரீதரன், அவரது மௌனம்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாக நஃபர் மௌலவி அடையாளம்
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார். சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த தூண்டிவிட்டார் என்பது தெரியவந்ததுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார். உளவுத்துறைமேலும் படிக்க...
இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது!
மறைந்த மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் வரை இறுதி அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார்மேலும் படிக்க...
கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கையின் செயற்பாடு குறித்து சர்வதேச சமூகம் பாராட்டு
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கையின் செயற்பாடு குறித்து சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்கள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், சுகாதார அமைச்சுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்மேலும் படிக்க...
பொதுமக்கள் பொறுப்பு அற்றவர்களாக இருக்கக் கூடாது – அமைச்சர் கெஹலிய
புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கக்கூடாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கமும் பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் இணைந்து சிறிய அளவிலான விழாக்களை நடத்த அனுமதித்துள்ளன என்றும் கூறினார். இருப்பினும் கொரோனா தொற்றின் மூன்றாவதுமேலும் படிக்க...
மட்டக்களப்பில் உள்ள முக்கிய பிரச்சினை: சபையில் காட்டமாக கேள்வியை முன் வைத்தார் சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதயவியல் பிரிவின் ஆய்வக (Cardiology Unit – Cardiac Catheterization Laboratory) வசதிகளை செய்துகொடுக்க சுகாதார அமைச்சு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக,மேலும் படிக்க...
திருமதி இலங்கை அழகியின் கிரீடத்தை பறித்த கரோலின் ஜூரி: ரோஸி சேனநாயக்க அதிருப்தி
இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியின்போது, கரோலின் ஜூரியின் நடத்தையை பார்த்து வெறுப்படைந்ததாக கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் கரோலின் ஜூரி, குறித்த நிகழ்வில் செயற்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல எனவும் அவர்மேலும் படிக்க...
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு என்றமேலும் படிக்க...
தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என்றே பௌத்த தேரர்கள் கூறுகின்றனர் – மனோ கணேசன்
தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தமிழர்களுக்கும் அதற்கு உதவுங்கள் என சர்வதேச சமூகத்துக்கும் தேரர்கள் மறைமுகமாகக் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த இன்று (திங்கட்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “கறுப்பு ஜூலைமேலும் படிக்க...
முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும்- காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள்
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி கனகரஞ்சினி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனப்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 269
- 270
- 271
- 272
- 273
- 274
- 275
- …
- 435
- மேலும் படிக்க
