இலங்கை
பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு
வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே, எதிர்வரும்மேலும் படிக்க...
நாவலரின் 200ஆவது நூற்றாண்டு விழா- அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பம்!
நாவலரின் 200ஆவது நூற்றாண்டினை முன்னிட்டு அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை), நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமரின் இந்து மத விவகார அலுவலருக்கானமேலும் படிக்க...
ஊடகவியலாளர் மீது தாக்குதல்- விசாரணையை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வட.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இணைப்பாளர் த.கனகராஜ் மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
மாவீரர் நினைவு நாள் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது!
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள், தமிழர் தாயகத்திலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நேற்று (சனிக்கிழமை) நினைவுகூரப்பட்டனர். இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் வீடுகளிலும் மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. நேற்று மாலை 6.05மேலும் படிக்க...
புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!
விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குமேலும் படிக்க...
சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் – அரசாங்கத்தில் உள்ளவர்களை எச்சரித்தார் தயாசிறி
சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்தானந்தவினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கடந்த அரசாங்கம் இறுதிமேலும் படிக்க...
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி
இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராகமேலும் படிக்க...
இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன்
1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,மேலும் படிக்க...
தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறது – கஜேந்திரன்
இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச நாடுகளில் பொலிஸ் மற்றும் நீதித்துறை என்பனமேலும் படிக்க...
இலங்கையின் விமான போக்குவரத்து எதிர்வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும்
இலங்கையின் விமான போக்குவரத்து எதிர்வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு புதிய விமான நிறுவனங்கள் டிசம்பரில் இருந்து நாட்டிற்கு நேரடி விமான சேவையை தொடங்கவுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, டிசம்பர் 3 ஆம் திகதி,மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து கொழும்பு பேராயர் கவலை
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். வாதுவையில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுமேலும் படிக்க...
யாழில் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது
யாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தைமேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பு வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் – பிரதமர்
புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர்மேலும் படிக்க...
மாவீரர் தினம்- அரசியல்வாதிகளிடம் சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை
குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கைமேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ள உலக வங்கி
கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர் (uansமேலும் படிக்க...
மக்களின் நினைவு கூரும் உரிமையை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது- ஸ்ரீநேசன்
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமையை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தற்போதைய அரசாங்கத்தைமேலும் படிக்க...
சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல் ஆக்கப் பட்டோருக்கு நிதி- அனந்தி
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பொறுப்புக்கூறலைப் புறந்தள்ளும் அரசாங்கம், சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு 300 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் கேட்பது,மேலும் படிக்க...
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் : வடக்கில் பல இடங்களில் நடத்த தடை
தமிழர்களின் உரிமைப் பேராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பிக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்றைய தினம் (21) ஆரம்பிக்கவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி வரைமேலும் படிக்க...
கிளிநொச்சியில் இடம் பெற்ற விபத்தில் இருவர் காயம்
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் பயணித்த டிபர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில்மேலும் படிக்க...
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க 20 ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு!
காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20 ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு தமிழில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான விண்ணப்பம், காணாமல் போனவரின் தேசிய அடையாள அட்டை,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- …
- 256
- மேலும் படிக்க