இலங்கை
தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் ஆவணத்தை தயாரிக்க திட்டம்

“ மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எனவே, இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.” என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.மேலும் படிக்க...
சிறைச்சாலைகள் 300 வீதம் நிரம்பி வழிகின்றன – நீதி அமைச்சர் தகவல்

நாட்டின் முழு சிறைச்சாலை அமைப்பிலும் 300 வீதம் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிறையில் 37,761 கைதிகள் இருந்தாலும், அவர்களில் 27,000 பேர் சந்தேக நபர்கள் என்றுமேலும் படிக்க...
இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியில் இணைகிறது இலங்கை

இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குரிய யோசனையை கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேர் அமைச்சரவையில் முன்வைத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்புமேலும் படிக்க...
பிரதமர் மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (IMF) இடையே சுவிட்சர்லாந்தில் சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை (Kristalina Georgieva) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த கலந்துரையாடலில் தொழில்மேலும் படிக்க...
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாகக் குறையும் – உலக வங்கி தகவல்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 3.1 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. நாட்டின் தயாரிப்பு சந்தைகளில் உள்ள திறமையின்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பு தடைகள் மந்தநிலைக்கு வழிவகுக்கும்மேலும் படிக்க...
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் – பிரதமர் ஹரிணி சுவிஸில் சந்திப்பு

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படிமேலும் படிக்க...
இலங்கையில் விவசாயத் துறையில் முதலீடு செய்ய சீனா திட்டம்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பயன்படுத்தி பாரிய அளவிலான பால் உற்பத்திப் பண்ணைகள் மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட மரக்கறி, பழங்கள் போன்ற விவசாய உற்பத்திகளை மேற்கொள்வது அவர்களின் நோக்கமாக உள்ளது.மேலும் படிக்க...
பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்மேலும் படிக்க...
செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்மேலும் படிக்க...
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், துஷ்பிரயோகங்-களை மேலும் அதிகரிக்கும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், நாட்டில் மனித உரிமை துஷ்பிரயோகங்களை மேலும் அதிகரிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம் ‘ (Human Rights Watch) எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின்மேலும் படிக்க...
கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமைமேலும் படிக்க...
தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தை, தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டதால் அவரது கைகளிலிருந்து தவறி விழுந்து, தலை சீமெந்து தரையில் மோதியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று அளுபோமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. படதொப துடுவ பிரதேசத்தை சேர்ந்த ருசேலி கெயாஷா என்ற இரண்டரைமேலும் படிக்க...
மேர்வின் சில்வாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டரீதியான வருமானத்தை விஞ்சி சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மேலும் படிக்க...
கொழும்பில் பணிப் பெண்ணை நிர்வாணமாக காணொளி பதிவு செய்த தொழிலதிபர் கைது

கொழும்பு – பொரள்ளையில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சமீப நாட்களில் இந்த காணொளி பரவியதைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம்மேலும் படிக்க...
புத்தர் சிலை விவகாரம்! தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும்மேலும் படிக்க...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன – ஆளுநர் நா.வேதநாயகன்

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில்மேலும் படிக்க...
அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் கலந்துரையாடல்

தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற உபகுழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட இந்த உபகுழு,மேலும் படிக்க...
பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு அளிப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து நாடு திரும்பிய இலங்கை பழைய மாணவர்களுக்காக கடந்த வெள்ளிக்கிழமை (16) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் விசேட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினார். 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இளங்கலை முதல்மேலும் படிக்க...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த மத குருக்கள் நால்வரும் ஏனைய பொதுமக்களும் இன்றைய வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர,மேலும் படிக்க...
மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- …
- 438
- மேலும் படிக்க
