இலங்கை
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக நாளை போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள மற்றும் அதனை சூழவுள்ள தமது காணிகளை மீள கையளிக்க கோரி காணி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (11) மற்றும் புதன் கிழமை (12) ஆகிய இரு நாட்களிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தையிட்டி பகுதியில் உள்ளமேலும் படிக்க...
காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் நாளை மறுதினம் ஆரம்பமாகிறது. சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி இதனைத் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானதுமேலும் படிக்க...
இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – நான்கு பேர் பலி
குருணாகலை, தோரயாய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கதுறுவெலவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்தொன்றுமேலும் படிக்க...
யாழ். பல்கலையில் மோதல்; இரு மாணவர்கள் காயம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை (09) தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 3ஆ ம் மற்றும்மேலும் படிக்க...
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதிமேலும் படிக்க...
மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே நாட்டில் உள்ளது-சஜித் பிரேமதாச

நாட்டில் இன்று மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே காணப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவிசாவளையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களைமேலும் படிக்க...
மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு – நோயாளர்கள் அவதி

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறுமேலும் படிக்க...
80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு
நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார உப மின்நிலையங்களில் புணரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தடைபட்ட மின்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் – அமைச்சர் ஜெயக்கொடி

பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை

நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். இன்று (09) காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகமேலும் படிக்க...
சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். சுமார் 40க்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியரும் ஆவார். உயிரிழக்கும் போதுமேலும் படிக்க...
அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு மறுவாழ்வு ; கனேடிய அரசு கனேடிய வர்த்தக சம்மேளனம் அனுசரணை

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக திட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலையின் ஓய்வு நிலை பேராசிரியர் காசி விஸ்வனாதன் செல்வகுமார்மேலும் படிக்க...
கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்திருக்கலாம் – அமைச்சர் விமல் ரட்நாயக்க

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்திருக்கலாம் என அமைச்சர் விமல் ரட்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (9) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விமல் ரட்நாயக்க பிற்பகல் கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்மேலும் படிக்க...
யாழில் போதைப்பொருளை வாங்குவதற்காக சித்தியின் நகையை திருடியவர் உள்ளிட்ட நால்வர் கைது

போதைப்பொருளை வாங்குவதற்காக சித்தியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் உட்பட திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட 3 இளைஞர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, திருநெல்வேலி பகுதியிலுள்ளமேலும் படிக்க...
திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் இன்று சனிக்கிழமை (08) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது,மேலும் படிக்க...
துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “ரொட்டும்ப உபாலியை” தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

சர்வதேச பொலிஸாரால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட நாடகந்தகே உபாலி எனப்படும் “ரொட்டும்ப உபாலியை” 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 39 வயதுடைய இவர் 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர்மேலும் படிக்க...
முகம்மது சாலி நழீம் எம்.பி மீது தாக்குதல்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் காயமடைந்து ஏறாவூர்மேலும் படிக்க...
அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது – சத்தியலிங்கம் எம்.பி

நாட்டில் உள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தமைக்கு வெறுமனே ஊழல் மாத்திரமே காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டார். எனவே இலங்கையில் நீண்டகாலமாகமேலும் படிக்க...
பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ் சாரதி மீது நேற்றிரவு வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகமேலும் படிக்க...
மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி

எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- …
- 439
- மேலும் படிக்க
