Main Menu

BUNDESLIGA கால்பந்து தொடர்: இருபத்து ஏழாவது வார போட்டிகளின் முடிவுகள்

ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அணிகள் விளையாடுவது வழக்கம்.

அவ்வாறான 56 ஆண்டுகள் பழமையான புஃண்டர்ஸ்லிகா கால்பந்து தொடர், தற்போது ஜேர்மனியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 27 முறைகள் சம்பியன் பட்டம் வென்று, அசைக்க முடியாத அணியாக பேயர்ன் முனிச் அணி திகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில் இத்தொடரின் 2018-2019ஆம் ஆண்டு பருவக் காலத்துக்கான தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

சரி வாருங்கள் இத்தொடரின் இருபத்து ஏழாவது வார போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்…

ட்ரைசம்ஸ்டேடியன் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், பேயர்ன் முனிச் அணியும் , ஃப்ரீபர்க் (குசநiடிரசப) அணியும் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியானது, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதில் பேயர்ன் முனிச் அணி சார்பில், ரோபர்ட் லெவண்டோவ்ஸ்கி 22ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

ஃப்ரீபர்க் அணி சார்பில், லூகாஸ் ஹோலர்  3ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
………..

வெஸ்ட்பலன்ச்டேடியன்  விளையாட்டரங்கில் நடைபெற்ற இன்னொரு போட்டியொன்றில், போரூஸியா டோர்ட்மண்ட்  அணியும், வூல்ஃப்ஸ்பர்க் அணியும் மோதிக் கொண்டன.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போரூஸியா டோர்ட்மண்ட்  அணி, 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் போரூஸியா டோர்ட்மண்ட்  அணி சார்பில், பெக்கோ அல்கேகர் 90ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், 94ஆவது நிமிடத்தில் இன்னொரு கோலும் என இரண்டு கோல்கள் அடித்தார்.
………..

ரெட் புல் அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு போட்டியொன்றில், ஆர்.பி. லெய்ப்ஸிக்  அணியும், ஹெர்தா பெர்லின் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இரசிகர்களின் உச்ச விறுவிறுப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆர்.பி. லெய்ப்ஸிக் அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

இதில் ஆர்.பி. லெய்ப்ஸிக் அணி சார்பில், எமில் ஃபோஸ்ஸ்பர்க் 17ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

யுசப் போல்சன் 27ஆவது, 56ஆவது மற்றும் 62ஆவது நிமிடங்கள் ஹெட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

அமாடோ ஹைடாரா  64ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.