Main Menu

பிரெக்ஸிட் விவகாரத்தில் “முன்னேறிச் செல்ல வேண்டும்” என முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்

பிரெக்ஸிட் ( Brexit) விவகாரத்திலிருந்து “முன்னேறிச் செல்ல வேண்டும்” என முன்னாள் பிரதமர் தெரசா மே
( Theresa May ) வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது தொடர்பில் தற்போதைய பிரதமர் பரிசீலிப்பது தமக்கு “பேரதிர்ச்சி” அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்த பிரதமர் தெரசா மே, “பிரெக்ஸிட் முடிந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள்” எனவும் கூறியுள்ளார் .

கடந்த 2016 முதல் 2019 வரை பிரதமராக இருந்த தெரசா மே, ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது குறித்த விவாதத்தைத் தொடங்குவதற்குப் பதிலாக, தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் அன்டி பே(ர்)னாமிடம் வலியுறுத்தியுள்ளார் .

இதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான தனது ஒப்பந்தத்துக்கு அன்று பாரா ளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தால், ஐக்கிய இராச்சியம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” எனவும் முன்னாள் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார் .