Main Menu

பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகளால் வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகப் புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

வேலை செய்யும் வயதுடைய ஐந்தில் ஒருவர் தற்போது உடல்நலப் பாதிப்புகளால் தொழிலில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாறு வேலை செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு இலட்சத்தால் அதிகரித்துள்ளது.

நீண்டகால நோய்கள் மற்றும் மனநலப் பாதிப்புகள் இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்நிலை பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழிலாளர் சந்தைக்கும் பெரும் சவாலாக அமையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.