Main Menu

கஸ்ஸப தேரர் பிணையில் விடுவிப்பு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் விகாரைக் கட்டடம் அமைத்தமை மற்றும் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவியமை தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியமை மற்றும் திருகோணமலை நீதிமன்றம், அநுராதபுரம் நீதிபதி ஆகியோர் தொடர்பில் அவமதிப்பான கருத்துகளைத் தெரிவித்தமை தொடர்பாக தேரர் சார்பில் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றம் தேரரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.