அதிகாலையில் ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்; 20 பேர் காயம்!
மத்திய ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலையில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஐச்சி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பான் வானிலை ஆய்வு நிலையத்தின் தகவல்படி, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:04 மணிக்கு ஷிசுவோகா மாகாணத்தின் மேற்குப் பகுதியில், சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ஐச்சி மாகாணத்தின் சிட்டா பகுதியில், ஜப்பானிய நிலநடுக்கச் செறிவு அளவுகோலில் ‘5-ன் மேல் நிலை’ (upper 5) எனப் பதிவானது.
ஐச்சி, நகானோ மற்றும் கிஃபு மாகாணங்களின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் தீவிரம் ‘5-க்கும் கீழ்’ (lower 5) எனப் பதிவாகியுள்ளது.
எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
அண்மைய தகவல்களின்படி, இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் போது கட்டிடங்களிலிருந்து வெளியேற முயன்றவர்களில் சிலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
