Day: November 8, 2026
“நக்சல் அச்சத்தில் இருந்து மக்கள் முழுமையாக விடுபட்டுள்ள முதல் தீபாவளி இது” – பிரதமர் மோடி

“நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் நக்சல்கள் குறித்த அச்சத்தில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ள முதல் தீபாவளி இது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடியபோது பேசிய பிரதமர் மோடி, “2004 முதல் 2013 வரையிலானமேலும் படிக்க...
இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாள் – அமைச்சர்கள் மரியாதை

தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக அரசின் சார்பில், தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாளைமேலும் படிக்க...
“அரசியல் நிலைப்பாட்டை மென்மைப்படுத்தி மக்களைக் கவரும் முயற்சியில் ஈடுபடப் போவதில்லை” – Mélenchon

Jean-Luc Mélenchon தனது அரசியல் நிலைப்பாட்டை மென்மைப்படுத்தி மக்களைக் கவரும் முயற்சியில் ஈடுபடப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Le Bourget நகரில் நவம்பர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தனது தீவிர அரசியல் கொள்கைகளில்மேலும் படிக்க...
நவம்பர் 11இல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – கடற்றொழிலாளர்-களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்மேலும் படிக்க...
புதிய அரசாங்கத்தை அமைக்க ஐசென்கோட்டுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அழைப்பு

தேர்தல் முடிவுகள் எவருக்கும் தெளிவான பெரும்பான்மையை வழங்காத நிலையில், புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மிக வலுவான போட்டியாளரான காடி ஐசென்கோட்டுக்கு (Gadi Eisenkot) இஸ்ரேல் ஜனாதிபதி சனிக்கிழமை (07) அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலின் நீண்டகாலத்மேலும் படிக்க...
அதிகாலையில் ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்; 20 பேர் காயம்!

மத்திய ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலையில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஐச்சி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பான் வானிலை ஆய்வு நிலையத்தின் தகவல்படி, உள்ளூர் நேரப்படிமேலும் படிக்க...
இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

2026 ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கையின் மொத்த அதிகாரப்பூர்வ வெளிநாட்டுக் கையிருப்பு 7.09 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாத இறுதியில், மொத்த அதிகாரப்பூர்வ கையிருப்பு தற்காலிக மதிப்பீட்டின்படி 7,086 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக மத்திய வங்கிமேலும் படிக்க...
வான்வழிப் பயணத்தில் புதிய அத்தியாயம்: ட்ரோன் சோதனை

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கான ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கையாக, கொழும்பு துறைமுக நகரில் பயணிகள் ட்ரோன்களின் சோதனைப் பறப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வ செயல்விளக்கம் நடத்தப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாகமேலும் படிக்க...
தீபாவளி ஒளியில் ஒற்றுமை மலரட்டும் – பிரதமர் தீபாவளி வாழ்த்து

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளித் திருநாள் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், செழிப்பு நிறைந்த நாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமசூரிய தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இதனைக்மேலும் படிக்க...
அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் இந்து பக்தர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, சௌபாக்கியம் நிறைந்த மனப்பூர்வமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதிமேலும் படிக்க...


