Main Menu

மக்களின் முடிவே இறுதியானது – தேர்தல் குறித்து ஜனாதிபதி

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த தேர்தலுக்குச் செல்ல அரசாங்கம் தயார் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் இன்று (07) இடம்பெற்ற ‘வேலை செய்வோம் – நாட்டை உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளிலான தொழிற்சங்க தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த மக்கள் இருக்கும் வரையில் தேசிய மக்கள் சக்திக்கு அடக்குமுறைச் சட்டங்கள் தேவையில்லை. மக்கள் இல்லையென்றால், அடக்குமுறைகளைப் பயன்படுத்தி நாங்கள் ஆட்சியில் நீடிக்க மாட்டோம். அடுத்த தேர்தலுக்குச் செல்லுமாறு மக்கள் கூறினால், நாங்கள் அதற்குத் தயாராகவே இருக்கிறோம். அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் ஆட்சியில் நீடிக்கத் தயாராக உள்ள சக்தியல்ல நாங்கள்” எனத் தெரிவித்தார்.