Main Menu

பைனான்ஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டு அபத்தமானது – வட கொரியா பதிலடி

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனானில் (Binance) நடந்த சாதனை அளவிலான 6.3 பில்லியன் டொலர் ஹேக்கிங்கிற்குப் பின்னால் தாங்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வட கொரியா மறுத்துள்ளதுடன், அக்குற்றச்சாட்டுகளை “அபத்தமான சொல்லாடல்” கூறியுள்ளது.

கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசின் உயர்மட்ட அதிகாரியும், அந்நாட்டுத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரியுமான கிம் யோ-ஜோங், இந்த குற்றச்சாட்டுகள் பியோங்யாங்கின் பிம்பத்தைக் கெடுப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் மற்றொரு “தீய முயற்சி” என்று செவ்வாய்க்கிழமை (03)  தெரிவித்தார்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (FBI), சீக்ரெட் சர்வீஸ் (Secret Service) மற்றும் சைபர் ஆய்வாளர்கள், வரலாற்றிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படும் இந்த ஹேக்கிங் தாக்குதலை வட கொரியாவே திட்டமிட்டு நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

தனது தடைசெய்யப்பட்ட பொருளாதாரத்திற்கு நிதியளிக்க இணையவழிக் குற்றங்களை நம்பியிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வட கொரியாவுடன் தொடர்புடைய அண்மைய ஹேக்கிங் இதுவாகும்.

இந்தத் தாக்குதலை, அரசால் ஆதரிக்கப்படும் ‘டிரேடர்டிரேட்டர்’ (TraderTraitor) என்ற ஹேக்கிங் குழு வழிநடத்தியதாக FBI தெரிவித்துள்ளது.