Main Menu

ரகித, சரித்திற்கு பிணை வழங்கியதை எதிர்த்து மனுத் தாக்கல்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவரின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அளித்த தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி சீராய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில்இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

குறித்த மனு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.