தமிழரசுக் கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைவில் பின்னடைவு
ஒருங்கிணைந்த கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதனூடாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்று குழு கடந்த 2 மாதங்களுக்கு முன் இடம் பெற்ற கலந்துரையாடலில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது.
ஆனால் அது குறித்து தமிழ் அரசுக் கட்சி இன்றும் பரிசீலிக்கவில்லை என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், ஆனாலும் இதுவரை இணக்கமான முடிவுகள் எட்டப்படவில்லை எனவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் தீர்வை காணுதல் மற்றும் இராஜ தந்திர ரீதியான அரசியல் செயற்பாடுகள் குறிப்பாக சர்வதேச நாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேசுவது உள்ளிட்ட விவகாரங்களில் இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயற்படுவது என 5 சுற்று பேச்சுகளிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
ஆனால் இதுவரையில் தமிழரசுக் கட்சி சாதகமான பதில் வழங்கவில்லை என கூட்டணி தரப்புகள் தெரிவிக்கின்றன.
