Main Menu

நாடு கடத்தப்பட்ட முன்னாள் த.வி. பு*லிகள் உறுப்பினர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் பு*லிகள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது,

2015 ஆம் ஆண்டு, இந்திய பாதுகாப்புப் பிரிவினரால் LTT*E  அமைப்பை மீளமைப்பது தொடர்பாக முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

அத்தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னர் அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் 2026.10.26 ஆம் திகதி இரவு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்தபோது, பொலிஸ் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 50 வயதுடையவர் என்பதுடன், மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் பிரதேசத்தில் வசித்து வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.