Main Menu

நாட்டில் சீர்குலைவை ஏற்படுத்தும் கனவு ஒருபோதும் பலிக்காது – மோடி

நாட்டில் சீா்குலைவை விளைவிக்க வேண்டுமென்ற சிலரின் கனவு ஒருபோதும் பலிக்காது என பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சாடும் வகையில், பிரதமா் இதனைக்   குறிப்பிட்டுள்ளார்.

‘ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஓராண்டில் ஏவப்பட்ட   ரொக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கு இணையாக முயற்சித்தும், காங்கிரஸால் தனது தலைவரை  முன்னிறுத்த முடியவில்லை’ எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலனையும், ஜனநாயகத்தையும் விரும்பும் நோ்மையான விமா்சகா்களின் குரலை அடக்குவதாக காங்கிரஸின் அணுகுமுறை உள்ளது  எனவும்  உலகம் புதிய ஒழுங்குமுறையைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டில் சீா்குலைவை விளைவிக்க வேண்டுமென சிலா் கனவு காண்கின்றனா்  எனவும்  அவா்களின் கனவு ஒருபோதும் பலிக்காது  எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளா் பட்டியல்  விசேட தீவிர திருத்தம்  மூலம் தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள  நிலையில் பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.