Main Menu

சீனாவில் நிலநடுக்கத்தால் பேரழிவு! உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

சீனாவின் தென்மேற்கு பிராந்தியமான திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 7.0ஆகப் பதிவாகியுள்ளதுடன் நாக்ஷு (Nagqu) நகருக்கு வடகிழக்கே சுமார் 190 கி.மீ தொலைவிலும், திபெத்தின் தலைநகரான லாசாவிற்கு (Lhasa) வடகிழக்கே 390 கி.மீ தொலைவிலும் உள்ள மலைப்பகுதியில், 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தை அடுத்து அந்தப்பகுதியில் இரண்டாம் நிலை அவசரகால பேரிடர் மீட்பு நடவடிக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 2024 ஜனவரி மாதத்திற்குப் பிறகு சீனாவில் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.