பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும்,
மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00 மணி வரை பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு என்பவற்றை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணிக்கு 5 சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.
பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
