Main Menu

பயிற்சியாளருட-னான மோதல்: ரொனால்டோ-வுக்கு 30 நாள் இடைக்காலத் தடை

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடையை போர்த்துக்கல் கால்பந்து கூட்டமைப்பு (FPF) விதித்துள்ளது.

அணியில் தனது பங்கு குறித்து பயிற்சியாளர் ஜேழர்ஜ் ஜீசஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, தேசிய அணியின் முகாமிலிருந்து அவர் வெளியேறியது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, 41 வயதான அந்த முன்கள வீரர் மீதான குற்றச்சாட்டை முழுமையாக உறுதிப்படுத்தியதாக திங்கள்கிழமை (21) தெரிவித்தது.

இந்த மாத தொடக்கத்தில் டென்மார்க்கிற்கு எதிராக நடைபெற்ற போர்த்துக்கலின் நேஷன்ஸ் லீக் போட்டிக்கு முன்னதாக நடந்த இந்தச் சம்பவத்திற்காக, ரொனால்டோவுக்கு 255 யூரோக்கள் (285.83 அமெரிக்க டொலர்கள்) அபராதமும் விதிக்கப்பட்டது.

ரொனால்டோவுக்கும் ஜீசஸுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்தே இந்த இடைநீக்கம் நிகழ்ந்துள்ளது.

அணியில் தனது பங்கு குறித்து அளித்த வாக்குறுதியை ஜீசஸ் இருமுறை மீறிவிட்டதாக ரொனால்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

நோர்வேக்கு எதிரான போர்த்துக்கல் அணியின் போட்டியில், ரொனால்டோ மாற்று ஆட்டக்காரராக இருந்தும் களமிறக்கப்படாததைத் தொடர்ந்தே இந்த மோதல் உருவானது.

டென்மார்க்கிற்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, ரொனால்டோ கோபன்ஹேகனில் உள்ள போர்த்துக்கல் முகாமை விட்டு வெளியேறியதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கைகள் தொடரப்பட்டன.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வுகள் தொடர்பாக, கூட்டமைப்பு ஒக்டோபர் 9 அன்று இந்த வழக்கைத் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.