Day: October 20, 2026
நிலக்கரி இறக்குமதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தியின் போது ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, நபர் ஒருவர் தனது காரால் மோதியதுடன், மீண்டும் காரைப் பின்னோக்கிச் செலுத்தி இரண்டாவது முறையாகவும் அவர் மீது மோதியதில், அந்த உறுப்பினரின் கால் அகற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களும் அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தனர். இந்தச் சம்பவம்மேலும் படிக்க...
நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

இந்தியா-நியூசிலாந்து இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) செவ்வாய்க்கிழமை (20) முதல் நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவின் 17-வது செயல்பாட்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்கள், மாணவர்கள் மற்றும் திறன்மிக்க பணியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளதாகமேலும் படிக்க...
ஜி.எல். பீரிஸ் வௌியேறினார்!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சுமார் இரண்டு மணித்தியால வாக்குமூலப் பதிவின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, முன்னாள்மேலும் படிக்க...
ஞானசார தேரருக்கு விடுதலை கோரி 5ஆவது நாளாகவும் சத்தியாகிரகம்

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பிக்குகள் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வருகை தந்த தேரர்கள் இந்தமேலும் படிக்க...
நாமலின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவுக்கு பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதன்படி, சந்தேக நபரை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டுமேலும் படிக்க...
இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79 மரணங்கள் பதிவாகியுள்ளன. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, தற்போதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 103,565 ஆகும். அத்துடன், மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.19மேலும் படிக்க...
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து, சற்றுமுன் அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். அவர் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டம்மேலும் படிக்க...
பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட சில நகரங்களில் ஊரடங்கு

நாடு முழுவதும் வார இறுதியில் கலவரங்களும் கொள்ளைச் சம்பவங்களும் அரங்கேறியதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதிகாரிகள் பாரிஸின் மத்தியப் பகுதிகள் மற்றும் பிற நகரங்களில் திங்களன்று (19) இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளை அமுல்படுத்தியுள்ளனர். வார இறுதியில் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடிய ‘பிளேஸ் டிமேலும் படிக்க...
பயிற்சியாளருட-னான மோதல்: ரொனால்டோ-வுக்கு 30 நாள் இடைக்காலத் தடை

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடையை போர்த்துக்கல் கால்பந்து கூட்டமைப்பு (FPF) விதித்துள்ளது. அணியில் தனது பங்கு குறித்து பயிற்சியாளர் ஜேழர்ஜ் ஜீசஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, தேசிய அணியின் முகாமிலிருந்து அவர் வெளியேறியது கண்டறியப்பட்டதை அடுத்து இந்தமேலும் படிக்க...
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 5 ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான நீளம் பாய்தல் T47 பிரிவில் இலங்கையின் மொஹமட் சஃப்ரான் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இறுதி முயற்சியில் 6.55 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்த சஃப்ரான்,மேலும் படிக்க...
பாராளுமன்ற வளாகத்தில் இன்று (20) நவராத்திரி பூஜை வழிபாடுகள்

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (20) நவராத்திரி பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடுமேலும் படிக்க...
