யாழ்ப்பாணத்தில் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான 7 வாகனங்கள் பறிமுதல்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 7 வாகனங்களை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட 7 வாகனங்களில் 4 அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் என்பதுடன், அவற்றுக்கான பதிவுப் புத்தகங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய 3 வாகனங்களில் ஒன்று போலிப் பதிவைக் கொண்டிருந்ததாகவும், மற்றைய இரண்டு வாகனங்களும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட வாகனங்கள் என்பதாலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
