Day: October 18, 2026
மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார். கலகொடஅத்தே ஞானசாரமேலும் படிக்க...
ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்திய சாலைக்கு மாற்றம்

ஷிரந்தி ராஜபக்ஷ, பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து நவாலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால்மேலும் படிக்க...
கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்

ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் (Sri Lanka Ramanna Maha Nikaya) அனுநாயக்கர் (துணைத் தலைவர்) மற்றும் கண்டி கேடம்பே ராஜோபவனாராமய (Gatambe Rajopawanaramaya) பௌத்த விகாரையின் தலைமை விஹாராதிபதியான கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் இன்று (18) காலமானார். இறக்கும் போதுமேலும் படிக்க...
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தலையிடாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சூசகமாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடப்போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பதுளையில் இன்று (18) நடைபெற்ற தேசியமேலும் படிக்க...
‘இப்படி சாகக்கூடாது என்று போராடினேன்” – இந்திய விமானி ஸ்மித் மச்சார் விவரிப்பு

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ‘ஃப்ளைதுபாய்’ விமானத்தில் தாக்குதலுக்கு உள்ளான இந்திய விமானி ஸ்மித் மச்சார், தாக்குதல் சம்பவத்தின்போது, ‘ஏதாவது செய். நீ இப்படி இறந்துவிடக் கூடாது’ என்று சொல்லிக்கொண்டதாகக் கூறினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான 7 வாகனங்கள் பறிமுதல்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 7 வாகனங்களை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடியாது – நீதியமைச்சர்

நிலவும் சட்டத்திட்டங்களுக்கமைய, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்மேலும் படிக்க...
ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு

ரஷ்ய ஏற்றுமதிகள் தொடர்பான தடைகளையும் கட்டணங்களையும் நீக்கிய மறுநாளான சனிக்கிழமையன்று (17) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த விவகாரம் குறித்து இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்று தெரிவித்தார். இதற்கிடையில், நிலைமையை மதிப்பீடு செய்ய கூடுதல் காலம் தேவைப்படுவதாக வெளியுறவுத்துறைமேலும் படிக்க...
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை

வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பொதுச் சேவைகளின் சரிவு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், சனிக்கிழமையன்று (17) பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. பல தசாப்தங்களாக அந்நாடு கண்டிராத மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் இதுவும்மேலும் படிக்க...
கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் துர்கா பூஜை பந்தலில் சனிக்கிழமை (17) மாலை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்தனர் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாமேலும் படிக்க...
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்

குவைத்தில் உள்ள ஒட்டுமொத்த வீட்டுப் பணியாளர்களில் சுமார் 86.1 சதவீதத்தினர் நான்கு வெவ்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது, மொத்தம் உள்ள 883,308 பணியாளர்களில் 760,744 பேர் இந்த நான்கு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அந் நாட்டு பொதுமேலும் படிக்க...
திரையரங்கிலிருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மீட்பு

கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹன்வெல்ல வீதிப் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைத்த தகவலின்மேலும் படிக்க...
கொழும்பில் பிக்குமாரின் சத்தியாக்கிரகம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குகள் சிலர் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வந்த பிக்குகள் இந்தச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தனர். அன்றையமேலும் படிக்க...
அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு: முதல்வர் விஜய்க்கு கலாநிதி மாறன் நேரில் அழைப்பு

சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் – இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரது திருமணம் நவம்பr 21-ல் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருமண வரவேற்பு அழைப்பிதழை அனிருத், கலாநிதி மாறன், காவேரி மாறன் ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில்மேலும் படிக்க...
