Main Menu

மரண தண்டனை தற்காலிகமாக மாற்றப் பட்டுள்ளமைக்கு சவூதி அரேபிய அரசுக்கு நன்றி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜனுக்கு அந்த தண்டனை இரத்து செய்யப்பட்டமை இலங்கையர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது ஒரு அரசு சார்ந்த விஷயம் அல்லவென்றும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க, கிறிஸ்தவ என்ற எந்தவித பேதங்களும் இன்றி இலங்கையர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரார்த்தித்தோம், விரும்பினோம் மற்றும் போராடினோம் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சவூதி அரேபியாவில் போர்ச் சூழல் நிலவும் இத்தகைய கடினமான காலகட்டத்திலும் கூட, இதைக் கவனத்தில் கொண்டு தற்காலிகத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுத்த சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், அதன் மக்களுக்கும், குறிப்பாக அந்த நாட்டின் பிரதமர் இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களுக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.