மருத்துவ உலகில் AI புதிய புரட்சி : மனித DNA-வை மாற்றிமைக்கும் முறையைச் சுயமாகக் கண்டுபிடித்த Claude AI
மனிதர்களின் மரபணுக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்குப் பயன்படுத்தக்கூடிய புதிய மரபணு மாற்ற முறையொன்றை, Anthropic நிறுவனத்தின் Claude AI தன்னிச்சையாகக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CRISPR போன்ற மரபணு திருத்தத் தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய இந்த புதிய அணுகுமுறை, கணினியில் உரைகளை Cut, Copy, Paste செய்வதைப் போன்ற வகையில் மரபணுக்களில் குறிப்பிட்ட மாற்றங்களை மேற்கொள்ள உதவக்கூடும் எனக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகள் விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டிய சிக்கலான ஆய்வுப் பணிகளை, Claude AI சுமார் 21 மணி நேரத்தில் முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த அணுகுமுறை மனிதர்களுக்கான மருத்துவ சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர், அதன் பாதுகாப்பு, துல்லியம் மற்றும் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விஞ்ஞான ரீதியாக பரிசோதிக்கப்பட வேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் பரம்பரை நோய்கள் உள்ளிட்ட மரபணு சார்ந்த நோய்களுக்கான புதிய சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கான ஆய்வுகளுக்கு, இத்தகைய AI அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் உதவக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
