Main Menu

24 H பார்சிலோனா கார் பந்தயம்: அஜித்தின் ‘RedAnt Racing’ அணி 2 ஆம் இடம் பிடித்து வெற்றியைப் பதிவு செய்தது

ஸ்பெயினில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 24 மணி நேர பார்சிலோனா (24H Barcelona) கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமாரின் ‘அஜித் குமார் ரேசிங்’ மற்றும் ‘ரெட் ஆன்ட் ரேசிங்’ (RedAnt Racing) கூட்டு அணி 2 ஆம் இடத்தை பிடித்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஐரோப்பிய எண்டூரன்ஸ் செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அஜித்குமாரின் பந்தய அணி சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெற்றிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அரங்கில் இந்தியாவின் பெயரையும், தமிழ்நாட்டின் பெருமையையும் பன்னாட்டுச் சுவடுகளில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் இந்த அணி தொடர்ச்சியான வெற்றிகளை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையைத் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான தனது காதலைத் தொடர்ந்து நிரூபித்து வரும் நடிகர் அஜித்குமாரின் இந்தச் சாதனைக்குத் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.