பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கை அழைத்து வரப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான லலித் கன்னங்கரவுக்கு (பஸ் லலித்) 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் அவருக்கு உள்ளதாகக் கூறப்படும் தொடர்பு குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
