Main Menu

கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத்தீயால் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்: ஆகஸ்டிலும் தொடரும் என எச்சரிக்கை

ஜூலை மாதம் முழுவதும் ஐரோப்பா முழுவதும் பரவிய பெரும் காட்டுத்தீ, ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்து பரவி வருகிறது.

கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் போன்ற நாடுகளில் நிலவும் கடுமையான வெப்பமான வானிலை மற்றும் இந்தக் காட்டுத்தீ காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் பரவி வரும் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து காட்டுத்தீ காரணமாக 434,976 ஹெக்டேர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் 1,407 காட்டுத்தீ சம்பவங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 17.98 மில்லியன் தொன் கார்பன் ஈராக்சைடு வளிமண்டலத்தில் கலந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்திலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மேலும் காட்டுத்தீ ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் நகரத்திற்கு அருகிலும் ஒரு பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இந்தக் காட்டுத்தீ இதுவரை 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காட்டுத்தீ ஆபத்து காரணமாக, அப்பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு பாதுகாப்புப் பிரிவினர் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.