கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு
மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மவுசாகலை பகுதிகளில் 25 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் அளவை எட்டுவதற்கு இன்னும் 31 அடி 2 அங்குலம் மட்டுமே உள்ளதாகவும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது மொத்த கொள்ளளவை அடைவதற்கு 16 அடி 2 அங்குலம் அதிகமாக உள்ளது மேலும் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 26 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
