Main Menu

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின்7 பேர் காயமடைந்த நிலையில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது.