Main Menu

இந்தியாவில் 2 நாட்களில் ரூ. 100 கோடியைக் கடந்தது “Spider-Man: Brand New Day”

டோம் ஹாலண்ட் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் சாதனை படைத்து வருகிறது.

இந்தப் படம் இந்தியாவில் வெளியான 2 நாட்களில் ரூ. 131.46 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலைக் (Gross Collection) குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் இதன் இரண்டு நாள் வசூல் (Net Collection) சுமார் ரூ. 109.95 கோடியைக் கடந்துள்ளது.

அதேவேளையில், இந்தப் படத்தின் உலகளாவிய ஒட்டுமொத்த வசூல் சுமார் ரூ. 2,600 கோடியை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.