Main Menu

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்

சடலமாகக் இன்று (17) அதிகாலை கண்டெடுக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலாபே, தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வுட்லர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) முல்லேரியா வைத்தியசாலைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.

இந் நிலையில், முன்னாள் பொலிஸ்மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்தார்.

இறப்பு தொடர்பான பிரேதப் பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இச்சம்பவம் குறித்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இறப்புக்குக் காரணமான சூழ்நிலைகள் குறித்து நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள் முழுமையான விசாரணையை மேற்கொள்ளவுள்ளன என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.