Main Menu

6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இராட்சத கங்காரு – புதிய கண்டுபிடிப்பு

நியூ கினியாவின் தாவோரா குகையில் கண்டெடுக்கப்பட்ட விரல் எலும்புப் படிமத்தின் மூலம், இராட்சத கங்காரு இனம் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததுள்ளமை உறுதியாகியுள்ளது.

Protemnodon tumbuna என்ற இந்த இராட்சத கங்காரு இனம், மற்றைய கங்காருகள் போல் குதிக்காமல் நான்கு கால்களால் நடந்து வலம் வந்துள்ளன.

அவுஸ்திரேலியாவின் இராட்சத விலங்கினங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அழியவில்லை என்றும், சில இனங்கள் மனிதர்களுடன் பல்லாயிரம் ஆண்டுகள் இணைந்து வாழ்ந்துள்ளன என்றும் இந்த ஆய்வின் ஊடாக உறுதியாகியுள்ளது.