நீர்கொழும்பு சிறைச் சாலைக்குள்ளான வன்முறை 26 பேர் உயிரிழப்பு
நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, சற்று நேரத்திற்கு முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்படி, 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 19 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 23 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலையில் இருந்த சிசிடிவி கட்டமைப்புகள் மற்றும் உடல் ஸ்கேனர் இயந்திரம் என்பன கைதிகளால் முழுமையாகச் சேதப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறினார்.
