சிலாபம் வைத்திய சாலையில் தாக்குதல்; இரு பாதுகாப்பு அதிகாரிகள் காயம்
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற இரண்டு நபர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் அங்கு பணியாற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவர் மற்றொருவருடன் மதுபோதையில் வந்து, உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவரும் ஒரு நோயாளியைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குள் நுழைய முயன்றதாக வைத்தயசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களைத் தடுக்கத் தலையிட்டபோது, தாக்குதல் நடைபெற்றது.
காயமடைந்த அதிகாரிகள் தற்போது அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்தியசாலை அதிகாரிகள் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, கரவிட்டவைச் சேர்ந்த 34 மற்றும் 35 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் உறுபடுத்தியுள்ளனர்.
