Main Menu

எகிப்து பெரிய பிரமிடில் சிந்து சமவெளி செந்தமிழ்: எழுத்துகளை வெளியிட்டு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தகவல்

உல​கின் 7 அதிச​யங்​களில் ஒன்​றான எகிப்து பிரமிடு​கள் பண்​டைய காலத்​தில் பார்​வோன் (Pharaoh) என்ற பூமியை ஆள்​வோன் என்​னும் சிறப்பு பெயருடைய மன்​னர் வம்​சத்​தின் நினை​வுச் சின்​னங்​களாக உள்​ளன. இங்கு 4,540 ஆண்​டு​கள் பழமை​யான பாரோ கூபு​வின் சமா​தி​யான கிசா(Giza) என்ற பெரிய பிரமிடின் நுழை​வாசலில் பொறிக்​கப்​பட்​டுள்ளவை குறி​யீடு​கள் அல்ல என்​றும், அவை கிமு 7500 ஆண்​டு​கள் முதல் 3500 ஆண்​டு​கள் வரையி​லான காலத்​துக்கு உட்​பட்ட சிந்து சமவெளி நாகரி​கத்​தின் செந்​தமிழ் மொழி​யின் 6 எழுத்​துகள் என திருச்​சி​யைச் சேர்ந்த சிந்து சமவெளி ஆய்​வாளர் சு​பாஷ் சந்​திர​போஸ் கூறியுள் ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: பெரிய பிரமிடின் 6 எழுத்​துகளை சிந்து சமவெளி நாகரி​கத்​தின் எழுதும் முறைப்​படி இடமிருந்து வலமாக​வும், உள்​ளிருந்து வெளி​யாக​வும் 2 வித​மாக படித்து பொருளறிய​லாம். முதலா​வ​தாக, ‘பஉளின் நள்’ அதாவது பவுழியன் நள் எனவும், அதற்கு தமிழ் அகரா​தி​யின் துணை​யுடன் ‘பூமி நாட்டை ஆண்​ட​வ​னான சேரன் நடு​வே’ எனவும் பொருளறிய​லாம்.இரண்​டாவ​தாக, ‘பா உ(ள்​) ளன்நள்’ என்​பதற்கு ‘தூய்​மை​யான உற்ற நட்​பினன் நடு​வே’ என பொருளறிய​லாம். இவற்​றில் முதலா​வதை பூமியை ஆள்வோன் (பார்​வோன்) என்​ப​தால் பூமி நாட்டை ஆண்டமன்​னன் நடுவே என்​ப​தைக் கொண்டு ‘கூட்​டுப் பொருள்​கோள்’ என்ற தமிழ் இலக்கண முறைப்​படி ‘நடுவே உள்​ளவன் பார்​வோன்’ எனக் கருதலாம்.
<div class="paragraphs"><p>சிந்து சமவெளி செந்தமிழ் உயிர், மெய் எழுத்துகள்.</p></div>

சிந்து சமவெளி செந்தமிழ் உயிர், மெய் எழுத்துகள்.

இரண்​டாவதை சிந்து சமவெளி நகர நாகரிக பானை ஓடு​கள், வில்​லைகள், முத்​திரைகளில் தூய்மை எனப் பொருள்​பெறும் ‘பா’ என்ற சொல் அதிக அளவில் முன்​னிலை பெற்​றுள்​ள​தால், தூய்​மை​யான உற்ற நட்​பினன் நடுவே என்​ப​தைக் கொண்டு ‘கூட்​டுப் பொருள்​கோள்’ என்ற தமிழ் இலக்கண முறைப்​படி நடுவே உள்​ளவன் தூய்​மை​யான உற்ற நட்​பினன் எனவும் கருதலாம்.

நைல் நதிக் கரையோரம் அமைந்​துள்ள மன்​னர்​கள் பள்​ளத்​தாக்​கில் (கிங்ஸ் வேலி) மேலை நாட்டு அறிஞர் பெரு​மக்​களால் கண்​டறியப் பெற்​றுள்​ளதும், 2100 ஆண்​டு​களுக்​கும் முற்​பட்​டது​மான சிகைக் கொற்​ற(ா)ன், சாத்​தன் போன்​றவை செந்​தமிழ் பெயர்ச் சொற்​கள் என்​ப​தால் எகிப்து நாட்​டுக்​கும், தமிழகத்​துக்​கும் இடையே தொடர்பு இருந்​தது தெரியவரு​கிறது. இருப்​பினும், எகிப்து நாட்​டுக்​கும், சிந்து சமவெளிக்​கும், தமிழகத்​துக்​கும் இடையி​லான தொடர்பு எவ்வகை​யானது, பிரமிடின் கட்​டு​மானப் பணி​யில் தமிழக கட்​டிடக்கலைஞர்​களின் பங்கு இருந்​துள்​ளதா போன்ற வினாக்​களுக்கான விடைகள் ராயத்தக்கவை. இவ்வாறு அவர் கூறினார்.