Main Menu

வவுனியா ஓமந்தையில் சோகம்: இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை – நாவற்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை காவல்நிலைய பொறுப்பதிகாரி  குறிப்பிட்டார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 32 வயதான இளைஞன் உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறினர்.

உயிரிழந்த இளைஞனின் உடலம் வவுனியா பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குழுவினர், கிராமத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.