Main Menu

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மர்மான மரணத்தின்போது, கைப்பற்றப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியின் தரவுகளை பெறுவதற்காக இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மர்மான மரணம் தொடர்பான அறிக்கை இன்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய தவணையின்போது, 17, 18, 19 மற்றும் 20 ஆம் சாட்சிகள் வாக்குலத்திற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், 17 மற்றும் 18 ஆம் சட்சியங்களின் வாக்குமூலங்கள் மட்மே பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக, 19 மற்றும் 20 ஆம் சாட்சிகளின் சட்டத்தரணிகளான, ஜனாதிபதி சட்டத்தரணி ரீஞ்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த இரண்டு சாட்சிகளுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

அவர்கள் முன்நிலையாகத நிலையில் சாட்சிகளை விசாரணை செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மர்மான மரணம் தொடர்பான மேலதிக சாட்சி விசாரணைளை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு அழைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.