Main Menu

10 நாட்களில் மாற்றங்களை எப்படி கொண்டு வர முடியும்? – முதல்வர் விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும்: குஷ்பு கருத்து

ஆட்​சிக்கு வந்த 10 நாட்​களில் மாற்​றங்​களை எப்​படி கொண்டு வர முடி​யும்? முதல்​வருக்கு அதற்​கான நேரத்தை கொடுங்​கள் என்​று நடிகை குஷ்பு தெரி​வித்​தார்.

சின்​னத்​திரை தயாரிப்​பாளர் சங்​கத்​தின் தலை​வர் குஷ்பு மற்​றும் நிர்​வாகி​கள் தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை நேற்று சந்​தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் குஷ்பு கூறிய​தாவது: சின்​னத்​திரை தயாரிப்​பாளர் சங்​கம் சார்​பாக கஷ்டப்​படும் தயாரிப்​பாளர்​களின் நலனுக்​காக சில கோரிக்​கைகளை முதல்​வரிடம் வைத்​துள்​ளோம்.

கோரிக்​கைகளை நிறைவேற்​றித் தரு​கிறோம் என முதல்​வரும், அமைச்​சர் ராஜ்மோக​னும் தெரி​வித்​தனர். முதல்​வர் விஜய்யை எனது தம்பி என்று சொல்​வதற்கு எனக்கு பெரு​மை​யாக உள்​ளது. ஒரு அக்​கா​வாக அவரை இப்​போது பார்த்​ததும் உணர்ச்​சிபூர்​வ​மாக இருந்​தது.

அவரது செயல்​பாடு​கள் பற்றி சொல்ல வேண்​டுமென்​றால், நிச்​சய​மாக தமிழகத்​தில் நல்ல மாற்​றங்​களை கொண்டு வரப்​போகிறார் என தெரி​கிறது. பாலியல் வன்​கொடுமை சம்​பவங்​கள் ரொம்ப கஷ்ட​மான விஷ​யம். யாரும் அப்​படி நடக்க வேண்​டும் என்று எதிர்​பார்க்​க​வில்​லை.

நம்சமு​தா​யத்​தில் இந்த மாதிரி மிரு​கங்​கள் இன்​னும் வாழ்ந்து கொண்​டிருக்​கிறார்​கள். ஆனால், ஆட்​சிக்கு வந்த உடன் அனைத்​தை​யும் சரிப்​படுத்த வேண்​டுமென்​றால் எப்​படி முடி​யும்? இத்​தனை ஆண்​டு​களாக நீங்​கள் மாற்றி மாற்றி ஆட்சி செய்​தும் ஒன்​றும் செய்ய முடிய​வில்​லை​யே, 10 நாட்​களில் மாற்​றங்​களை எப்​படி கொண்​டுவர முடி​யும்? முதல்​வருக்கு அதற்​கான நேரத்தை கொடுங்​கள்.

உங்​கள் தந்​தை​யும், நீங்​களும் இத்​தனை ஆண்​டு​களாக கொண்டு வரமுடி​யாத மாற்​றத்தை விஜய் பத்து நாட்​களில் எப்​படி கொண்​டுவர முடி​யும். நிச்​சய​மாக மாற்​றம் வரும். அதற்​காகத்​தான் விஜய்யை மக்​கள் தேர்ந்​தெடுத்​துள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.